உங்ககிட்ட பான் கார்டு இருக்கா?.. அப்போ உடனே இதை செக் பண்ணுங்க.. இல்லனா ரூ.10,000 அபராதம்..!

By Nanthini on ஆனி 7, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு பான் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. நிதி பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் பான் கார்டை பயன்படுத்தினால் வருமானவரித்துறையிலிருந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியாகி உள்ளது. பான் கார்டு செயலிழப்பும் நபர்கள் தற்போது பத்தாயிரம் ரூபாய் வரை அபராத விதிக்கப்படலாம். பல பயனர்கள் அறியாமலேயே செயலற்ற பான் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். இது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

பான் கார்டு என்பது வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கு மட்டுமல்ல வங்கி கணக்கு திறக்க, முதலீடு செய்ய மற்றும் சொத்து வாங்க என அனைத்து நிதி தேவைகளுக்கும் பயன்படுகிறது. உங்களுடைய பான் கார்டு செயலற்றதாக இருந்து ஆதார் கார்டுடன் இணைக்கப்படாமல் இருந்தால் வருமான வரி சட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வருமானவரித்துறைக்கு அதிகாரம் உள்ளது. இது போன்ற அபராத முறை தவிர்க்க உங்கள் பான் கார்டு இன்னும் செயலில் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.