பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?.. அட இப்படி மிஸ் ஆயிடுச்சே..!

By Nanthini on ஆனி 7, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவர் சமீபத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவை வைத்து இயக்கிய தக் லைஃப் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு முன்பு மணிரத்தினம் இயக்கிய பிரம்மாண்ட வெற்றி கொடுத்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இலக்கியங்களில் மிகப் பெரும் பழமை வாய்ந்த நாவலான பொன்னியின் செல்வன் நாவலை ஜெயமோகன் வசனத்தில் மணிரத்தினம் அழகாக சித்தரித்து இருந்தார்.

Ponniyin Selvan Archives - Page 2 of 3 - Full On Cinema

   

கிட்டத்தட்ட முப்பது வருட கனவாக இருந்த இந்த படைப்பை மணிரத்தினம் நினைவாக்கினார். ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படியான நிலையில் இந்த படம் குறித்து ஒரு செய்தியை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரபு இரட்டை வேடத்தில் நடித்த சத்திய வாக்கு படத்தை தயாரித்தவர் தான் ராம வாசுதேவன் மற்றும் பாலகோபி. இருவருமே பஞ்சு அருணாச்சலத்தை நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகிகளாக பணியாற்றியுள்ளனர்.

   

கார்த்தியின் வந்தியத்தேவன் பொன்னியின் செல்வனில் வசீகரமான மற்றும் சாகச  உளவாளி. இந்தியா டுடே போஸ்டரைப் பார்க்கவும்

 

இந்தப் படத்திற்கு பிறகு இருவரும் திரையுலகில் தயாரிப்பு நிர்வாகியாகவும் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தனர். திரை உலகில் ராம வாசு என்று அறியப்படுகின்ற ராமவாசுதேவன் சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருந்தது குறித்து பேசி உள்ளார். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு தயாரிப்பாளர் காஜா மொய்தின் தனது ரோஜா கம்பெனி சார்பாக அஜித்தை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவெடுத்தார். அவருடைய நண்பரான ராமவாசு அந்த அந்த ப்ராஜெக்ட்டுக்காக மணிரத்தினத்தை சந்தித்துள்ளார். அப்போது முழுமையாக பொன்னியின் செல்வன் கதையை தராமல் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்கலாம் என்று மணிரத்தினம் கூறியுள்ளார்.

வந்தியத்தேவனாக அஜித்தா? தகவல் பகிர்ந்த சினிமா தயாரிப்பாளர்! - Ajith as  Vandiya Thevan?

அதே பாத்திரத்தை வைத்து ஒரு படம் எடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இடையில் என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் அந்த தயாரிப்பு திட்டம் அப்படியே கைவிடப்பட்டது. பிறகு 2015 ஆம் ஆண்டில் பொன்னியின் செல்வன் கதையை விஜய் மற்றும் மகேஷ் பாபுவை கொண்ட தயாரிக்க மணிரத்தினம் திட்டமிட்டதும் அதற்கான முன்னேற்பாடுகள் பாதியில் நின்று போனதும் சினிமா ரசிகர்கள் அறிந்தது தான். இந்த செய்தி வெளியான பிறகு தற்போது ஒருவேளை இந்த படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் சிந்தித்துப் பார்த்து வருகிறார்கள்.