உருகி உருகி காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்ற சீரியல் நடிகைகள்.. இதோ மொத்த லிஸ்ட்..!

By Nanthini on ஆனி 7, 2025

Spread the love

பொதுவாகவே வெள்ளித்திரை நடிகர்களுக்கும் சின்னத்திரை நடிகர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதுதான் காதல் திருமணம். 80 மற்றும் 90 கால கட்டங்களில் இருந்து தற்போது வரை சினிமாக்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் பிரபலங்கள் பலரும் தங்களுக்குள்ளேயே காதலித்து திருமணம் செய்து கொள்வது இன்றளவும் தொடர் கதையாக தான் இருக்கிறது. அப்படி காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பிரபலங்கள் ஒரு சிலர் மட்டுமே கடைசிவரை ஒன்றாக வாழ்கின்றனர். பெரும்பாலான ஜோடிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். அதன்படி சின்ன திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு விவாகரத்து பெற்ற ஜோடிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நானும் ஜெயஸ்ரீயும் முறைப்படி பிரிந்து விட்டோம்: சீரியல் நடிகர் ஈஸ்வர்

   

ஜெயஸ்ரீ – ஈஸ்வர்:

   

சின்னத்திரை பிரபலங்களான இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமண வாழ்க்கை சுமுகமாக சென்று கொண்டிருந்த நிலையில் ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

 

PHOTOS: உருகி உருகி காதல் திருமணம்.. சில ஆண்டுகளுக்குள் விவாகரத்து பெற்ற சீரியல் நடிகர்கள் யார் யாருன்னு தெரியுமா? | List Of Serial Celebrities Who Got Divorce ...

விஷ்ணு – ஹரிப்ரியா:

எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி கொண்டிருப்பவர் தான் ஹரிப்பிரியா. அதனைப் போலவே வாணி ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்தான் விஷ்ணு. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

வேறு தொடர்பு..வயிற்றில் எட்டி உதைத்து அடித்தார்..டிவி நடிகை திவ்யா கண்ணீர்.. அர்ணவ் மீது புகார் | TV actress Divya complains against her husband Arnav - Tamil Oneindia

திவ்யா – அர்ணவ்:

சீரியல் நடிகர்களான இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஆண்டு பல பிரச்சனைகளை சந்தித்து மீடியா வரை சென்று விவாகரத்து வரை சென்றது. தற்போது திவ்யாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

பிக் பாஸூக்குள் போன தினேஷ்... ரச்சிதா பகிர்ந்த எமோஷனல் பதிவு! | Actress rachitha shared an emotional post about after dinesh entry into biggboss - kamadenu tamil

ரச்சிதா – தினேஷ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதா சீரியல் நடிகரான தினேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தற்போது இவர்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.

அப்பா கூட தப்பான உறவா?.. ஷகீலாவை வெளுத்து விட்ட சம்யுக்தா..! - Update News 360 | Tamil News Online

சம்யுக்தா – விக்னேஷ் காந்த்:

ஒரே சீரியலில் ஜோடியாக நடித்த இந்த சீரியல் பிரபலங்கள் நிஜத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே மாதத்தில் முடிவுக்கு வந்தது தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Reshma Pasupuleti: அசிங்கமான கமெண்டுகள்.. பாதியில் கைவிட்ட ஜிம் பாடி கணவர்..  ஆளுயர வளர்ந்த ஆண் மகன்! - ரேஷ்மா பேட்டி!

ரேஷ்மா:

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலஷ்மி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் காமெடி நடிகராக சூரியின் மனைவியாக நடித்து பிரபலமானார். ரேஷ்மாவின் முதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்து அவர்கள் சம்மதத்துடன் நன்றாக கோலாகலமாக நடைபெற்ற திருமணம் ஆகும். ஆனால், சில வருடங்களிலேயே இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து சில காரணமாக இவர்கள் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின்னர் சில காலங்களில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்னர் இவர் தன் கணவருடன் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார். பின் இரண்டாவது திருமணத்திலும் இவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் அவருடனும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

முதல் புருஷன் நல்லவர் தான்…. ஆனால் - மறுமணம் பற்றி மனம் திறந்த சீரியல்  நடிகை! - Update News 360 | Tamil News Online

ஸ்ரித்திகா:

“மெட்டி ஒலி” சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரித்திகா. திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன “நாதஸ்வரம்” சீரியல் மூலம் தான் நடிகை ஸ்ரித்திகா மக்கள் மத்தியில் பிரபலமானார்.  கடந்த 2019 ஆண்டு நாதஸ்வரம் புகழ் நடிகை ஸ்ரிதிகாவுக்கு, சநீஸ் என்பவருடன் வெற்றிகரமாக திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் அதன் பிறகு இவர் சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

1 வருடத்திற்கு முன்பே 2வது திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியின் முன்னாள்  கணவர்!

மகாலட்சுமி:

மகாலட்சுமி  சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு சச்சின் என்ற 6வயது மகன் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட காரணங்களால் அனில் – மகாலட்சுமி விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர். சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரை பிறகு இரண்டாவது திருமணம்  செய்துகொண்டார்.