நகைச்சுவை நடிகராக பரோட்டா சூரி ஆக பல திரைப்படங்களில் நடித்து வந்த சூரி தன்னை ஹீரோவாக மாற்ற வேண்டும் என்பதற்காக காமெடியை வேண்டாம் என்று ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இன்று சூரியன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள திரைப்படம் தான் மாமன். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரியின் கதையில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம்.

திருமணம் ஆகி பத்து ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லாமல் இருக்கும் கிரிஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுவாசிகா மற்றும் ரவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாபா பாஸ்கர் தம்பதியினர் குழந்தை பாக்கியம் வேண்டி பல விரதங்களை மேற்கொள்கிறார்கள். கிரிஜாவின் சகோதரரான சூரி அக்கா மீது அளவு கடந்த பாசத்துடன் வாழ்ந்து வருகின்றார்.

ஒரு கட்டத்தில் அவர் கர்ப்பமாக தன் அக்காவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது வயிற்றில் வளரும் குழந்தையிடம் என்னை பெற்றாரே என முதல்முறையாக பேசுவது என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய குழந்தை கொடி சுத்தி பிறந்ததும் மாமனுக்கு ஆகாது என்று பலரும் சொல்லி அனுப்பிவிட அழுது கொண்டிருக்கும் சூரிக்கு மருத்துவரான ஐஸ்வர்யா லட்சுமி அதெல்லாம் மூடப்பழக்கம் என சொல்ல குழந்தையின் அப்பா ரவியை தள்ளிவிட்டு மருமகனை முதல் ஆளாக மடியில் ஏந்தும் காட்சிகள் என ஓவர் பாசமாக முதல் காட்சிகளை செல்கிறது.

தன்னுடைய அப்பாவை போல பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறாரே என சூரியை மருத்துவரான ஐஸ்வர்யா லட்சுமி காதலிக்கின்றார். ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதாக காண்பித்து விட்டு மருமகன் நிலனை காட்டுகிறார்கள். மாமனை விட்டு ஒருபோதும் பிரியாத மருமகனாக நிலன் வளர்கின்றார். சூரியின் திருமணத்தில் கூட அத்தைக்கு நான்தான் தாலி கட்டுவேன் என அடம்பிடிக்க அங்கே சூரி செய்யும் விஷயம், முதலிரவில் வந்து மாமாவுடன் படுத்துக் கொள்வது என சிறுவனின் அடத்தின் காரணமாக ஐஸ்வர்யா லட்சுமியின் வாழ்வில் அடம்பிடிக்கும் புயல் மாமனையும் மருமகனையும் எப்படி பிரிக்கிறது.

அக்காவுக்கும் தம்பிக்கும் என்ன நடந்தது. கடைசியில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் முழு கதையாகும். அக்கா மீதும் அக்கா மகன் மீதும் அளவுக் கடந்த பாசக்காரனாக சூரி நல்லாவே நடித்துள்ளார். படத்தில் ஒவ்வொருவருடைய கதாபாத்திரமும் மிக அற்புதமாக அமைந்துள்ளது. ஆனால் சில காட்சிகளில் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பு படத்துடன் ஒட்டவில்லை பாசத்தில் பாஸ் மார்க் வாங்கும் இந்த மாமன் விமல் கேமியோவில் சொல்லும் ஒரு வார்த்தைக்கு அரங்கமே சிரிப்பதை போல படம் முழுவதும் குடும்பஸ்தன் வகையறா மோடில் கொண்டு சென்றிருந்தால் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியிருக்கும்.
