தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வந்தவர் தான் பாலு மகேந்திரா. ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த இவர் முள்ளும் மலரும் என்ற திரைப்படம் மூலம் தான் சினிமாவில் நுழைந்தார். இதனைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு அழியாத கோலங்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, சதி லீலாவதி என 15 திரைப்படங்களுக்கு மேல் இயக்கினார். இவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் தான் நடிகை மௌனிகா. இவர் 1998 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில், தன் அக்கா மகள் உதயா விபத்தில் உயிரிழந்தது குறித்து கண்ணீருடன் பேசி உள்ள அவர் கடவுள் என்னை ஏன் இப்படி துரத்துகிறார் என்று எனக்கு தெரியவில்லை. 2014 ஆம் ஆண்டு அவர் இறந்ததும் 2018 ஆம் ஆண்டு என்னுடைய மகள் என்னை விட்டு போய்விட்டாள். பாலு என்னுடைய வாழ்க்கையில் வரும் போது என்னுடைய பெரிய அக்காவின் கருவில் அவள் இருந்தால். இவர் இறந்து மூன்று வருடம் கழித்து ஒரு விபத்தில் அவள் இறந்துவிட்டால். என்னுடைய அக்கா மகளை கருப்பையில் சுமந்தால் என்றால் நான் அவளை என் மனதில் சுமந்தேன். அவர் இறந்த பிறகு இதற்கு மேல் வாழவே கூடாது என்று என்னுடைய கதையை முடித்துக் கொள்ளலாம் என்று கூட நினைத்தேன்.

ஆனால் என்னுடைய மகள் அவளின் இறந்த பிள்ளைகளை என்னை நம்பி விட்டு விட்டு போய்விட்டதால் நான் தவறான முடிவு எடுத்தால் அந்த குழந்தைகளின் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்து நான் பாலு மகேந்திரா உடன் வாழ்ந்த போது இரண்டு முறை கர்ப்பமாகியும் குடும்ப பிரச்சனை காரணமாக அதை கலைத்து விட்டேன். அந்தக் குழந்தைகளை தான் தற்போது என் மகளின் குழந்தைகளாக நினைத்துக் கொண்டு நான் பார்க்கிறேன். என்னுடைய வாழ்க்கை எதனால் இப்படி ஆனது என்று எனக்கு தெரியவில்லை.

என் மகள் உதயா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவளுக்கும் எனக்கும் சண்டை வந்ததால் நான் அவளிடம் பேசவே இல்லை. சண்டை சரியாகும் என்று நினைத்தும் கடைசி வரை அவளுடன் பேச முடியாமல் போய்விட்டது. அவளுடன் சண்டையை மறந்து நான் பேசி இருக்கலாம் என்று தினம் தினம் நினைத்து அழுது கொண்டிருக்கிறேன். அந்த ஆன்மாவிற்கு என்னுடைய மனப்பை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த பேட்டியில் கண்ணீர் மல்க மௌனிகா பேசியுள்ளார்.

மேலும் இயக்குனர் பாலு மகேந்திரா வால் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான மௌனிகா அதன்பிறகு தாலாட்ட கேக்குதம்மா மற்றும் வண்ண வண்ண பூக்கள் என பல திரைப்படங்களில் நடித்தவர் பாலுமகேந்திராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் தன்னுடைய அப்பா மகள் உதயாவை தன் சொந்த மகள் போல வளர்த்து வந்தார். தற்போது மோனிகா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
