பிளாப் ஆன கங்குவாவையே மிஞ்சாத ரெட்ரோவின் வசூல்.. முதல் நாள் கலெக்ஷனே இவ்வளவுதானா..?

By Nanthini on வைகாசி 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த படத்திற்கு ஓவர் பில்டப் காட்டி ப்ரோமோஷன் செய்த நிலையில் இறுதியில் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று மொக்கை வாங்கியது. இதனைத் தொடர்ந்து சூர்யாவிற்கு கட்டாய வெற்றி தேவை என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் தான் ரெட்ரோ.

ரெட்ரோ திரை விமர்சனம்

   

இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கண்ணாடிப் பூக்கள், கனிமா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைப் போலவே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுடன் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். காதலுக்காக அடிதடியை விட நினைக்கும் பாரி, அவனைத் துரத்தும் வளர்ப்பு தந்தை என ரெட்ரோ திரைப்படத்தின் கதை தொடர்கிறது. இந்த திரைப்படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் படத்திற்கு பாசிட்டி விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

   

surya massive film retro box office colelction day 1

 

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படியான நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி கங்குவா திரைப்படத்தின் வசூலை விட ரெட்ரோ திரைப்படம் முதல் நாள் வசூலில் அடி வாங்கியுள்ளது. ரெட்ரோ திரைப்படம் உலக அளவில் 20 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 13 கோடி வசூல் செய்துள்ளது.

surya massive film retro box office colelction day 1

ஆனால் கங்குவா திரைப்படம் உலக அளவில் 45 கோடி முதல் 50 கோடி வரை வசூல் செய்திருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் கங்குவா திரைப்படம் 22 கோடி வசூல் செய்திருந்த நிலையில் ரெட்ரோ திரைப்படம் அதைவிட குறைவாகத்தான் வசூல் செய்துள்ளது. இனிவரும் நாட்களில் ஒருவேளை படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.