எம்ஜிஆர் நடிப்பில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கே .ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முப்பெரும் தேவியர். சுஜாதா, நம்பியார், பிரபு, செந்தில், கே ஆர் விஜயா மற்றும் லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். பக்தி படமாக வெளியான இந்த திரைப்படத்தில் கேள்வி பதிலுடன் இணைந்த ஒரு பாடல் இடம்பெற்று இருந்தது. தான் என்ற கர்வம் கொண்ட ஒரு புலவன் தன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று சொல்ல, அவனிடம் தோற்றுப் போன புலவன் ஒருவன், சரஸ்வதி தேவி இடம் அழுது புலம்ப, சரஸ்வதி இறங்கி வந்து அந்த புலவனிடம் பாடல் போட்டியில் பங்கேற்கிறார்.

அப்போது வரும் அந்த பாடல் அந்தப் புலவன் கேள்வி கேட்க அதற்கு சரஸ்வதி தேவி பதில் சொல்வது போல அமைந்திருக்கும். அந்தப் பாடல் எழுதும் போது கவிஞர் வாலி பட குழுவுக்கு ஒரு விடுகதையை கூறியுள்ளார். சரஸ்வதி தேவி கேட்கும் ஒரு கேள்விக்கு அந்த புலவன் பதில் சொல்லவே கூடாது. அதன் பிறகு சரஸ்வதி அந்த கேள்விக்கான பதிலை சொல்லும் போது அனைவரும் ஆச்சரியப்பட வேண்டும். அப்படி ஒரு பாடலை நீங்கள் எழுதி ஒரு கேள்வியும் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயக்குனர் கே ஷங்கர் கூறியுள்ளார். கவிஞர் வாலி வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே எப்படி எழுதுவது என்று யோசித்து ஒரு வரியை எழுதியுள்ளார். எறும்பின் வாயை விட சின்னது அது என்னது என கேட்டுள்ளார்.

இதனைக் கேட்ட இயக்குனர் என்ன இது இப்படி இருக்கிறது என்று கேட்க உங்கள் யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள் பத்து நிமிடம் டைம் தரேன் என்று கூறியுள்ளார். உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் நானே சொல்கிறேன் என்று வாலி சொல்ல, பதில் என்றால் ஏதோ ஒன்று சொல்லக்கூடாது சரியாக இருக்க வேண்டும் என்று சொல்ல உடனே வாலியும் நான் சொல்லும் பதில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று சொல்லி எறும்பின் வாயை விட சின்னது அது தின்னுது என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு ஒட்டுமொத்த பட குழுவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது.
