விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லாவண்யா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் சீசனில் முல்லை கதாபாத்திரத்தில் முதலில் விஜே சித்ரா நடித்து வந்தார்.

அவர் திடீரென உயிரிழந்த நிலையில் அவரைத் தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவியா அறிவுமணி முல்லையாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரும் சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து லாவண்யா முல்லை கதாபாத்திரத்தை கையில் எடுத்து அற்புதமாக நடித்தார்.

இவர் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனைப் போலவே ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன் பிறகு இவரை எந்த சீரியல்களிலும் காண முடியவில்லை. இவர் பெரும்பாலும் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை தவறும் விதமாக புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

ஆனால் சமீப காலமாக தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில் அங்கு நீச்சல் உடையில் அவர் குளித்த ஸ்டில்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர். ‘இவரா இப்படி’ எனவும் கேட்டு வருகின்றனர்.

