எங்கிட்ட சொன்ன கதை வேற, என்ன வச்சு எடுத்த கதை வேற.. வழியே இல்லாமல் நடிச்சேன்.. நடிகர் ஷாம் பகிர்ந்த கசப்பான சம்பவம்..!

By Nanthini on பங்குனி 25, 2025

Spread the love

ஷாம் தமிழ்நாட்டின் மதுரையில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். பின்னர் பெங்களூரில் வளர்ந்தார். தனது கல்லூரி படிப்பை முடித்த பின்பு நடிகராக வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பத்தில் மாடலிங்கில் இறங்கினார். இவரின் இயற்பெயர் ஷம்சுதீன் இப்ராஹிம் என்பதாகும். ஷாம் பெங்களூரில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பல்வேறு விளம்பரங்களுக்கு மாடலிங் செய்தார். மாடலிங் செய்து கொண்டே சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார் ஷாம். 1999 ஆம் ஆண்டு காதலர் தினம் திரைப்படத்தில் ஷாம் நடிப்பதற்காக ஆடிசனுக்கு சென்றார். ஆனால் அவருக்கு அது கிடைக்கவில்லை. 12B படத்திற்கு நடிப்பதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ஷாம்.

தமிழில் 'சிக்ஸ்' ஷாம், தெலுங்கில் 'கிக்' ஷாம், கன்னடத்தில் 'கேம்' ஷாம்! |  Sham turns multilingual actor - Tamil Filmibeat

   

தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, அன்பே அன்பே, லேசா லேசா, உள்ளம் கேட்குமே, இயற்கை போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பிற்கான பாராட்டினை பெற்றார் ஷாம். உள்ளம் கேட்குமே படத்தைத் தவிர மற்ற படங்கள் பெரிதாக பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறவில்லை. 2000 களின் நடுப்பகுதியில் பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காத ஷாம் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக முடிவெடுத்தார். இறுதியாக விஜையுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த கமிட் ஆகியுள்ள ஷாம் சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமா இண்டஸ்ட்ரியல் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது நவரச நாயகன் கார்த்திக் மட்டும் தான். அவருடைய நடிப்பை எந்த இடத்திலும் யாராலயும் குறை சொல்லவே முடியாது.

   

நான் சோர்ந்த போதெல்லாம் என்னை அரவணைத்தார்… எஸ்.பி.ஜனநாதனின் பிறந்த நாளில்  ஷாம் உருக்கம் ! | Actor Shaam pays tribute to late director sp Jananathan  on his birthday - Tamil Filmibeat

 

அந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க கூடியவர். அவரைப் போலத்தான் ரகுவரன் சாரும். சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து டயலாக் பேப்பரை அப்படி இப்படி திருப்பி பார்த்துட்டு சீனுக்கு வந்ததும் எப்படி இருந்து வசனம் வருமே தெரியாம அந்த அளவுக்கு பிச்சு உதறுவாரு. பயங்கரமான நடிகர். சினிமாவில் நடிக்கும் போது எனக்கு பாலா படத்தில் நடிக்கும் போது ஒரு கசப்பான அனுபவம் நடந்தது. அதாவது தீபக் என்ற ஒரு பையன் எங்கிட்ட வேற ஒரு கதையை தான் சொன்னா. சரி நடிக்கலாம் என்று கூறிட்டு படத்தை கம்மிட் பண்ணிட்டு நானும் இயற்கை படத்தில் நடிக்க கிளம்பிட்டேன். திரும்ப வந்து பார்த்தா மொத்த கதையையும் மாத்தி வச்சிருக்காங்க. அந்தப் படத்தை ராஜூ மகாலிங்கம் என்பவர் தான் தயாரித்தார்.

Watch Bala | Prime Video

அவருடன் டி ஆர் பாலு மகனும் இணைந்து தயாரித்திருந்தார். நான் வந்ததும் என்ன கூப்பிட்டு ஷாம் சார் படத்தோட கதையை மாத்தணும் என்று சொன்னாங்க. நான் அந்த கதைக்கு தானே ஓகே சொல்லிட்டு போன இப்ப எதுக்கு மாத்துறீங்க என்று கேட்டதும் அதில் தீவிரவாதிகள் தாக்குதல் நிறைய இருக்கு அதனால கதையை மாத்திட்டோம் என்று சொன்னாங்க. உடனே டைரக்டர் தீபக் கிட்ட நான் சொன்னேன், இது உன்னோட கதையே இல்ல வேணும்னா சொல்லு நான் வேற தயாரிப்பாளர் கிட்ட அட்வான்ஸ் வாங்கி வச்சிருக்கேன் அங்க வேணும்னா பண்ணிக்கலாம் என்று சொன்னதும் அவன் இல்ல சார் இதுவே ஓகே தான் யுவன் சங்கர் ராஜா சார் கிட்ட சொல்லி பாட்டு எல்லாம் வாங்கியாச்சு இதுவே பண்ணலாம் என்று சொல்லிட்டான். நானும் அதுல இருந்து வெளியில் வர முடியாம அந்த படத்துல நடிச்ச. என்னோட அசிஸ்டன்ட் கூட இந்த படத்துல நடிக்க வேண்டாம்னு சொல்லியும் வேற வழி இல்லாம நடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் படம் சரியா கம்ப்ளீட் ஆகல. விருப்பமே இல்லாம தான் அந்த படத்துல நடிச்சு முடிச்சேன் என்று ஷாம் பேசியுள்ளார்