பாரதிராஜாவால் மண்வாசனைப் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரேவதி. அந்த படம் வெற்றிப் பெற்றதை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தார். தேவர்மகன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் பல விருதுகளையும் வாங்கி உள்ளார் .
திருமணம், குடும்பம் என செட்டிலான இவர் திரும்பவும் பல ஆண்டுகளுக்கு பின் தனுஷின் பவர் பாண்டி ,திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது 58 வயதாகும் இவர் சமீப காலமாகவே படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சலாம் வெங்கி என்ற ஹிந்தி படத்தை இயக்கினார்.

சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கலக்கி வந்த நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஒன்றாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். அதன் பிறகு நடிகை ரேவதி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு தனக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாக திடீரென கூறினார். தற்போது தனிப் பெற்றோராக குழந்தையை வளர்த்து வரும் அவர் ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிறார்.
ரேவதி, தான் கதாநாயகியாக நடித்த போதே கிளாமர் வேடங்களில் நடித்ததில்லை. அதே போல தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக மட்டும் தேர்ந்தெடுத்து நடித்தார். அப்படி இருந்தும் தான் நடித்த அனைத்துப் படங்களும் தனக்குப் பிடித்து, விரும்பி நடித்த படங்கள் இல்லை என அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள “ஒரு கட்டத்தில் நான் எனக்குப் பிடிக்காத படங்களில் கூட வேறு வழியில்லாமல் நடித்தேன். சினிமா என்பது என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிக்கும் வழி மட்டும் இல்லை. சினிமாவை நான் காதலிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
