அண்ணாத்த படத்துல நடிக்கும் போது ரஜினி சார் பார்த்ததும் ஷாக் ஆயிட்டாரு.. டான்ஸ் மாஸ்டர் சுஜாதா பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

By Nanthini on பங்குனி 21, 2025

Spread the love

சசிகுமார் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் தனது 2010 ஆம் ஆண்டு வெளியான ஈசன் திரைப்படத்தில் ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேட்டியா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கோரியோகிராப் செய்த இந்த பாடல் சிறந்த நடன அமைப்புக்கான பல்வேறு விருதுகளையும் தட்டி சென்றது. இந்தப் பாடல் முழுவதையும் பாடியவரே இந்த பாடலின் இறுதியில் செம ஆட்டம் போட்டு தனது நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்த நடிகை தான் சுஜாதா. சிறுவயதிலிருந்தே கோடம்பாக்கத்தில் இருந்து வளர்ந்த இவர் நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். பிறகு நடனப் பள்ளியில் சேர்ந்து பல்வேறு பரிசுகளையும் வாங்கி உள்ளார். அதன் மூலம் சினிமாவில் குரூப் டான்ஸராக சேர்ந்து ஆடத் தொடங்கியவர் முதலில் ரகு மாஸ்டரிடம் குரூப் டான்ஸ் ஆக சேர்ந்தார்.

என்னாது வானத்தை போல சீரியல் நடிகை டான்ஸரா.. ஈசன் படத்தில் வந்தனமா வந்தனமா  பாடலில் நடித்துள்ளாரா? | Do you know Vanathai Pola serial Villi character  Gomathi is a dancer ...

   

 

   

அதன் பிறகு சுந்தரம் மாஸ்டர் இடம் சேர்ந்த இவர் சூப்பர் ஸ்டார் நடித்த தளபதி திரைப்படத்தில் ராக்கம்மா கையத்தட்டு, காட்டு குயிலு போன்ற பாடல்களில் குரூப் டான்ஸ் ஆடி உள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் திரிஷாவின் அம்மாவாக நடித்திருந்தார். அதே சமயம் இயக்குனர் கதிர் இயக்கிய காதல் தேசம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற முஸ்தபா முஸ்தபா என்ற பாடல் மூலம் தான் மாஸ்டராக இவர் அறிமுகமானார். அதன் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைக்க தொடங்கிய நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தற்போது பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வரும் இவர்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு வில்லியாக சிந்தாமணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

 

சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி.. சந்தோஷத்தில் அண்ணாமலை..  விஜயாவிற்கு கிடைத்த அதிர்ச்சி | Siragadikka Aasai Serial Promo: Meena  Receives ₹2 Lakh Order ...

 

இப்படியான நிலையில் சுஜாதா சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ரஜினி குறித்து பட சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில், ரஜினியுடன் தளபதி படத்தில் காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டில் நடனமாடி இருப்பேன். நான் அப்போது 60 கிலோ தான் இருந்தேன். ரஜினி சார் எப்பவுமே என் கூட க்ளோசா இருப்பார். நான் அவர் கூட இணைந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா என 20க்கும் மேற்பட்ட ஷோ பண்ணியிருக்க. அது மட்டுமல்லாமல் 80 காலகட்டத்தில் ரஜினியின் சண்டைக் காட்சிகளுக்கு என்னுடைய கணவர் தான் டூப் போடுவார். முரட்டுக்காளை, தம்பிக்கு எந்த ஊரு மற்றும் நான் மகான் அல்ல என பல திரைப்படங்களுக்கு என் கணவர் தான் ரஜினிக்கு டூப் போட்டு இருக்கார். ரஜினியே பலமுறை அவன் இல்லனா நான் இல்லை என்று என் கணவரை பற்றி என்னிடம் பெருமையாக பேசுவார்.

 

தலைவா என்று தான் என்னுடைய கணவர் பாபுவை அவர் அழைப்பார். அதனால் என்னிடமும் அவர் ரொம்ப க்ளோசா பேசுவார். என்கிட்ட பேசும்போது கூட என் தோள் மேல கை போட்டு அவ்வளவு ஜாலியா பேசுவாரு. அந்த சமயத்துல அவர பார்த்ததோடு சேரி அதுக்கு அப்புறம் நானும் மாஸ்டர் ஆகி அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் போயிட்டேன். அதற்கு நடுவில் எனக்கு சர்ஜரி நடந்த சமயத்தில் கூட போன் பண்ணி ஒன்னும் பயப்படாத உனக்கு நான் இருக்க என்று ஆறுதலா பேசினாரு. அதன் பிறகு அண்ணாத்த திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் போது என்னை முதலில் யாருன்னு அவரால் கண்டுபிடிக்கவே முடியல.

பக்கத்துல இருந்த ஒருத்தங்க தான் சார் சுஜாதாவை பார்த்தீர்களா என்று சொன்னதும் ஆமா யாருன்னு எனக்கு அடையாளமே தெரியல எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க என்று சொன்னாரு. என்ன சார் பண்றது எனக்கு நடுவுல சர்ச்சரி நடந்துச்சு இரண்டு குழந்தைகள் ஆகிவிட்டார்கள் டான்ஸ் எல்லாம் பண்ணவே முடியல அப்படியே போயிடுச்சு என்று நானும் சொன்னேன். அந்த அளவிற்கு ரஜினி சாரால் கண்டுபிடிக்கவே முடியாத மாதிரி உடல் எடை கூடி நானும் அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டேன் என்று சுஜாதா சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.