இந்த வார TRB- இல் கெத்தாக நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த சின்ன மருமகள் சீரியல்.. மொக்கை வாங்கிய சிறகடிக்க ஆசை..!

By Nanthini on பங்குனி 20, 2025

Spread the love

சின்னத்திரை சீரியல்களின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது அதன் டிஆர்பி ரேட்டிங் மட்டும்தான். ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்ஸ் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான பத்தாவது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் டிவி சீரியல்களில் வழக்கமாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கக்கூடிய சிறகடிக்க ஆசை சீரியலை சின்ன மருமகள் சீரியல் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

article_image1

   

சின்ன மருமகள் சீரியலுக்கு 9.3 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ள நிலையில் கெத்தாக முதலிடத்தில் உள்ள அந்த சீரியலை காட்டிலும் 0.2 புள்ளிகள் கம்மியாக வாங்கி சிறகடிக்க ஆசை சீரியல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு 9.1 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது.

   

ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறகடிக்க ஆசை மீனா,வைரலாகும் வீடியோ | Tamilstar

 

இதற்கு அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் இருந்து 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது. அதனைப் போலவே 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அய்யனார் துணை சீரியல் தற்போது 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நேரம் மாற்றம் பாக்கியலட்சுமி சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

பாக்கியலட்சுமி, அய்யனார் துணை தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக புதிதாக தொடங்கப்பட்ட அய்யனார் துணை சீரியல் 5.4 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக 9.30 மணி ஸ்ளாட்டில் ஒளிபரப்பான சீரியல்களில் நம்பர் ஒன் இடம் பிடித்த சீரியல் ஆக ராஜா ராணி 2 சீரியல் இருந்த நிலையில் தற்போது சின்ன மருமகள் சீரியல் அந்த சாதனையை முறியடித்துள்ளது.