பிரபல நடிகருடன் காதல் வலையில் சிக்கிய ஜெயலலிதா.. எம்ஜிஆர் மீது இருந்த கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா..?

By Nanthini on பங்குனி 17, 2025

Spread the love

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்திய அளவில் இரும்பு மனுஷி என்று பல அரசியல் தலைவர்களால் போற்றப்பட்டவர். அரசியல் என்பதையும் தாண்டி அவருடைய இளமை காலங்களை திரும்பிப் பார்த்தால் ஜெயலலிதா ஒரு சிறந்த நடிகை என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டார். ஜெயலலிதா அரசியலுக்குள் வந்தது எப்படி என்றால் தனக்கு விருப்பமில்லாமல் நடந்த ஒன்று என்றுதான் சொல்வார். அதனைப் போலத்தான் அவர் சினிமாவுக்குள் வந்ததும். நன்றாக படிக்கக்கூடிய மாணவி படிப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தாய் நடிகை சந்தியாவின் வற்புறுத்தலால் சினிமாவுக்குள் வந்தவர் தான் ஜெயலலிதா.

அந்த நடிகருடன் நெருக்கமாக நடித்த ஜெயலலிதா!.. காட்சிகளை வெட்ட சொன்ன  எம்.ஜி.ஆர்!..

   

மிகவும் சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்ததால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை நடிகர்களும் அவரை விட வயதில் மூத்தவர்களாக தான் இருந்தனர்.  இதனிடையே ஜெயலலிதா எம்ஜிஆரை தவிர ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோரோடு நடித்துள்ளார். ஜெய்சங்கர் ரவிச்சந்திரனோடு நெருக்கமாக இருந்ததாக சொல்லப்படுவதுண்டு. ஜெயலலிதா ரவிச்சந்திரனோடு குமரிப்பெண் மற்றும் நான் போன்ற திரைப்படங்களில் நடித்த போது அவருக்கு ரவிச்சந்திரன் மீது காதல் வந்ததாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் ரவிச்சந்திரன் ஸ்ரீரங்கம் ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவர். மேலும் மூன்று தலைமுறைகளுக்கு முன்பே அவர்களது குடும்பத்திற்கு தொடர்பு இருந்து வந்ததாம்.

   

Actor Ravichandran and Jayalalitha : நண்பர்களால் வந்த பழக்கம்.. அட்டகாசம்  செய்த நடிகர் ரவிச்சந்திரன் - அப்போ ஜெயலலிதா என்ன செய்தார் தெரியுமா? - Ex CM  and Veteran ...

 

ரவிச்சந்திரனுக்கு ஜெயலலிதா மீது ஆசை இருந்தாலும் அவர் எம்ஜிஆரின் செல்வாக்குக்கு பயந்தார். கல்கண்டு பத்திரிக்கையில் ரவிச்சந்திரன் பற்றி தமிழ்வாணன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் சின்ன எம்ஜிஆர் உண்மையிலேயே சண்டை போடுகிறார் என குறிப்பிட்டு இருந்தார். அதில் சின்ன எம்ஜிஆர் உண்மையிலேயே சண்டை போடுகிறார் என குறிப்பிட்டு இருந்தார். அவர் ஒரு தமிழ் நடிகரை உயர்த்தி விட அவ்வாறு எழுதி இருந்தாலும் அது ஜெயலலிதாவின் தூண்டுதலின் பெயரில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவிற்கு எம்ஜிஆர் மீது இருந்த கோபமும் அவரை பழிவாங்கவே இப்படி செய்தார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல்களை வலம்புரி ஜான் ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்.