தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் அல்லது வீடு கட்ட வேண்டும் என்பது பிரபலங்கள் பலரின் கனவாக இருக்கும். அப்படித்தான் நடிகை நயன்தாராவும் போயஸ் கார்டனில் வீடு வாங்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளாகவே முயற்சி செய்து வந்தார்.

ஒரு வழியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய தொகையை கொடுத்து அங்கு ஒரு வீட்டை வாங்கிய நயன்தாரா அதன் பிறகு அந்த வீட்டை இடித்து தன்னுடைய கனவு இல்லத்தை கட்ட தொடங்கினார்.

சுமார் 7000 சதுர அடியில் 100 கோடி ரூபாய் செலவில் மூன்று தலங்களோடு இந்த வீடு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டின் கீழ் தளம் முழுவதும் கண்ணைக் கவரும் கலைநயம் மிகுந்த பொருட்களோடு ஒரு ஸ்டூடியோ போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது முதல் முறையாக தன்னுடைய ஒட்டுமொத்த ஸ்டூடியோவின் அழகையும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்படுவதுடன் பிரம்மிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்குமே பழங்கால பொருட்கள் மற்றும் கலைநயம் மிகுந்த பொருட்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த ஸ்டூடியோவை சினிமாவை மிஞ்சும் வகையில் உருவாக்கியுள்ளனர். வீட்டின் தரை முதல் படிக்கட்டு மற்றும் மாடியில் உள்ள தோட்டம், டெரசில் உள்ள ரூம், மோங்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பொம்மைகள் மற்றும் ஆள் உயர தாழி என இதை பார்க்கும் போது ஒரு அருங்காட்சியகத்தை பார்ப்பது போல உள்ளது.

பெரும்பாலும் மரங்களால் ஆன பொருட்களை வீடு முழுவதும் வைத்துள்ளனர். முதல் தளம் தான் நயன்தாரா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு வசித்து வருகின்றார். அங்கு கிச்சன் மற்றும் பெட்ரூம் ஆகியவை உள்ளது.

இரண்டாவது தளத்தில் குழந்தைகளுக்கான ப்ளேஸ்டேஷன் போன்ற இடமும் நயன்தாரா மற்றும் விக்கி திரைப்பட பணிகள் குறித்து பேசும் இடமும் உள்ளதாக கூறப்படுகின்றது. போயஸ் கார்டனில் உள்ள மற்ற பிரபலங்களின் வீட்டை விட தற்போது நயன்தாரா பிரம்மாண்டமாக போயஸ் கார்டனில் உயர்ந்து நிற்கிறார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
