மாயா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர்தான் அவந்திகா மிஸ்ரா. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் நடிப்பில் வெளியான என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் வெளியான டி ப்ளாக் என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான எமக்கு தொழில் ரொமான்ஸ் ஆகிய படங்களில் ஹீரோயினியாக நடித்து அசத்தியுள்ளார்.

தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு தயாரிப்பாளர்கள் தேடும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய அழகால் ரசிகர்களை ஏங்க வைத்த அவந்திகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

