எதுக்கு எங்க மீது இப்படி சேற்றை வாரி அடிக்கிறீங்க.. அன்னைக்கு உண்மையிலேயே நடந்தது இதுதான்.. பாடகி கல்பனா பரபரப்பு பேட்டி..!

By Nanthini on பங்குனி 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபலமான பாடகி கல்பனா சமீபத்தில் ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்பட்ட நிலையில் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியது. இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக சென்னையில் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாடகி கல்பனா, யூடியூபில் காரசாரமாக கல்பனா தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்றும் கல்பனாவின் கணவர் தான் அதற்கு காரணம் என்றும் செய்தி வெளியானது. கடந்த மூன்று நாட்களாக எனக்கு இதுவரை கிடைக்காத அளவுக்கு புகழ் கிடைத்துள்ளது. கடந்த 38 ஆண்டுகளாக கடுமையாக பாடிய புகழை விட கடந்த மூன்று நாட்களாக பெரிய புகழ் எனக்கு கிடைத்துள்ளது. என் விவகாரத்தில் மீடியா கையாளும் விவகாரம் சரியானது கிடையாது. நான் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யவில்லை. என்னுடைய உடலில் பல பிரச்சனைகள் உள்ளது.

   

நம்முடைய நல்ல விஷயம் பத்து பேருக்கு சென்றால் தவறான செய்தி பல பேருக்கு செல்லும் மோசமான நிலையில் தான் இன்றைய சமுதாயம் இருக்கின்றது. எனது கஷ்டங்களையும் வேதனையையும் கூறவே இந்த செய்தியாளர் சந்திப்பு. என் கணவருடன் எனக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அது எதுவுமே உண்மை கிடையாது. நான் இன்னும் படித்துக் கொண்டிருப்பதால் ஜனவரி மாதத்தில் இருந்தே எனக்கு உடலில் பல பிரச்சனைகள் உள்ளது. இருமல் மற்றும் நெஞ்சு வலியோடு தான் ஐந்து பாடல் நிகழ்ச்சிகளை முடித்தேன். தூக்கமின்மை பிரச்சனையும் இருந்தது. என்னதான் மைக்கை பிடித்து பாடல் பாடினாலும் நானும் ஒரு சாதாரண பெண் தான். தற்கொலை செய்து கொண்டதாக வதந்தியை மீடியாவினர் பரப்பி விட்டனர். என்னுடைய வாழ்வில் பிரசாந்த் பிரபாகர் போல ஒரு கணவர் கிடைத்தது எனக்கு பாக்கியம் தான்.

   

 

அவர் மட்டும் இல்லை என்றால் என்னால் இன்று உயிர் பிழை திறக்க முடியாது. எனக்கும் எனது குழந்தைங்களுக்கும் பிரச்சனை எனக் கூறப்பட்டது உண்மையல்ல. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று அதிக டோஸேஜ் மருந்துகளை எடுத்துக் கொண்ட காரணத்தினாலேயே நிலை தடுமாறி மயங்கி விழுந்து விட்டேன். அப்போது அருகில் இருந்த என்னுடைய கணவர் தான் மருத்துவமனைக்கும் போலீசாருக்கும் போன் செய்து என்னை காப்பாற்ற கூறினார். இதை சாப்பிட்டேன் அதை சாப்பிட்டேன் என்று ஏன் எங்களை போன்றவர்கள் மீது சேற்றை வாரி அடிக்கிறீர்கள். எனக்கு இதுதான் நடந்தது என்று யாரும் கூறாமல் நீங்களாக கூறுவது எப்படி. என்னைப் பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு நான்கு சுவர்களுள் நடந்தது எப்படி தெரிய வந்திருக்கும். எந்த விஷயமும் தெரியாமல் தற்கொலைக்கு முயன்றேன் என செய்திகளை போட வேண்டாம்.

சமுதாயத்தில் தொடரக்கூடிய அவல நிலை மாறவில்லை என்றால் இந்த உலகம் நெகட்டிவ் பற்றி மட்டுமே பேசும் சமுதாயமாக மாறும். இத்தனை பொய்களுக்கு பிறகும் என்னுடைய குடும்பமும் என் உறவினர்களும் தான் என் பின்னால் உறுதுணையாக இருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் எந்த அளவிற்கு பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறித்து நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். அந்தப் பெண்ணின் விவரங்களையும் அனைவரும் பகிர்ந்தார்கள். நம் நாட்டில் நூறு பாலியல் வன்கொடுமை நடந்தால் 10 மட்டுமே காவல்துறையினருக்கு தெரிய வருகின்றது.

அதில் ஒன்று மட்டுமே உயர்நீதிமன்றம் வரை சென்று தண்டனை பெறப்படும் சூழல்தான் தற்போது உள்ளது. தவறான தகவல்களை பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடமும் காவல்துறையினரிடமும் புகார் அளித்துள்ளேன். நமது குழந்தைகள் எண்ணங்களில் தவறான தகவல்களும் வீடியோக்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தவறான தகவல்களை மீடியாக்களில் பரப்புவோர் மீது தகுந்த தண்டனை வழங்க நல்ல சட்டத்தை கொண்டு வர தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கல்பனா பேசி உள்ளார்