இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை புரிந்த அஸ்வின் சமீபத்தில் தான் தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார். மற்ற கிரிக்கெட் வீரர்களை போல் இவருடைய வாழ்க்கையும் க்யூட்டான காதல் கதை நிரம்பியதாக உள்ளது. பள்ளி வாழ்க்கையில் தொடங்கி டேட்டிங் முதல் தற்போது வரை மறக்க முடியாத தருணங்களை கொண்டதாக உள்ளது. அஸ்வின் மற்றும் ப்ரீத்தி திருமணம் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஜோடிகளுக்கு அகிரா மற்றும் ஆத்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பல்வேறு கிரிக்கெட் தொடர்களுக்கு அஸ்வின் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் வந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/7Osq3dgHLdTYXcwSR2HT.jpg)
சென்னை பத்மா சாதவன் பள்ளியில் ஒன்றாக படித்தபோது அஸ்வினுக்கு பிரீத்தி மீது காதல் வந்த நிலையில் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தங்களுடைய காதல் கதை குறித்து சமீபத்தில் அஸ்வின் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் ஒன்றாக தான் படித்தோம். அப்படித்தான் எங்களுக்குள் அறிமுகமானோம். பிறகு வளர்ந்து பெரியவர்களாக ஆன பிறகு தான் மீண்டும் சந்தித்தோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு ஷர்ட் விளம்பரத்தை முடித்துவிட்டு பார்த்தால் அங்கு பிரீத்தி நின்று கொண்டிருந்தார். ஏனென்றால் அப்போல்லாம் லான்ட் லைனில் தான் போன் பேசிப்போம்.

அதிகமா உங்க அப்பா தான் போன் எடுப்பாரு. என்னானு கேட்டதும் பதறிப் போய் போன வச்சிருவேன். அப்படி இருக்கும்போது திடீர்னு அங்க ப்ரீத்தி பார்த்ததும் நானே ஷாக் ஆயிட்டேன். 1999 இல் இருந்து நான் திருமணம் செய்யும் 2011 ஆம் கால கட்டம் வரை நாங்கள் அதிகமா சந்தித்துக் கொண்டதே இல்ல. இடையில் 2009 ஆம் ஆண்டு தான் சந்தித்தோம். ஆனா அதுவரைக்கும் மே 26 அவங்க பிறந்தநாளுக்கு ஒரு வருஷம் கூட நான் விஷ் பண்ணாம இருந்ததே இல்ல. அப்புறம் ஒரு நாள் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கிரிக்கெட் கிரவுண்டுக்கு அழைத்துச் சென்று தான் ப்ரொபோஸ் பண்ண.

அதுக்கப்புறம் அவங்க அப்பா ஒரு நாள் எங்க வேலை பார்க்கிறிங்க என்று கேட்டார் இந்தியா கிரிக்கெட்டில் வேலை பார்த்துட்டு இருக்கேன் என்று சொன்னதும் சம்பளம் எவ்வளவு என்று கேட்டார். 65 ஆயிரம் என்று சொன்னதும் சரி என்று சொல்லிட்டாரு. அதன் பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டை வந்து பார்த்தாங்க. அதுல இருக்க சவால்கள் அவர்களுக்கு தெரியாது. எப்போ பார்த்தாலும் ஏன் வீட்டிலேயே இருக்க மாட்ற என்று கேட்பார்கள். அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுகிட்டாங்க என்று அஸ்வின் பேசியுள்ளார்.
