தயாரிப்பாளர் பையன்னா கிளம்பி வந்துடுவீங்களா?… ஜீவாவை முகத்துக்கு நேராக திட்டிய நாசர்… கரெக்டாதான் சொல்லி இருக்காரு!

By vinoth on மாசி 20, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர் பி சௌத்ரியின் இளைய மகன் ஜீவா. இவர் அவர் தந்தை தயாரித்த ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலமாக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் வரிசையாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து  டிஷ்யூம், பொறி, கோ, நண்பன் என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் இடையில் ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.

   

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்த ஜீவா திடீரென சில தவறான படங்களை தேர்வு செய்து நடித்ததால் மார்க்கெட்டை இழந்தார். இப்போது அவர் கைவசம் பெரிதாகப் படங்கள் இல்லை. சமீபத்தில் ப்ளாக் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். இதையடுத்து கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

   

 

இந்நிலையில் தனது முதல் படத்தில் ஒரு சம்பவம் பற்றி ஜீவா ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஆசை ஆசையாய் படம் நடிக்கும் போது எல்லோரும் என்னிடம் நன்றாகப் பேசுவார்கள். நாசர் சார் மட்டும் சரியாகப் பேசவில்லை. நானாக சென்று பேசினாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார்.

ஒரு நாள் என்னை அழைத்து ‘தம்பி நீ ஏன் சீனுக்கு ப்ரிப்பேர் ஆகவில்லை. சும்மா நிற்கிறாய்’ என்று கேட்டார். நான் “இல்ல சார் நான் ப்ராம்டிங் வச்சு அப்படியே நடிச்சுடுவேன்’ என்றேன். அதைக் கேட்டதும் அவர் கோபப்பட்டார். ‘ஏன்ப்பா தயாரிப்பாளர் பையனா இருந்தா அப்படியே கிளம்பி வந்துவிடுவீங்களா? எதுவுமே ப்ரிபேர் பண்ணாம’ எனத் திட்டினார். அப்போதுதான் எனக்கு ஒரு நடிகனாக இருக்க என்னவெல்லாம் பண்ணனும் என்பதே புரிந்தது” எனக் கூறியுள்ளார்.