தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைக் குறைத்துக் கொண்டார் சீதா. ஆனால் பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அவரின் இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். இப்போது அவர் சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்ற படத்தை இயக்கி அதை இந்தியன் 2 ரிலீஸ் ஆகும் நாளில் ரிலீஸ் செய்யவுள்ளார்.

பார்த்திபன் எதை செய்தாலும் வித்தியாசமாக செய்யவேண்டும் என நினைப்பவர். மேடைப் பேச்சு முதல் படத்தின் தலைப்பு வரை அவருக்கு எல்லாமே வித்தியாசமாக இருக்கவேண்டும். சில நேரம் வித்தியாசமாக செய்யவேண்டும் என்று அவர் கிறுக்குத் தனமாக செய்வதும் உண்டு.
இந்நிலையில் அவர் தன்னுடைய முதல் படமான ‘புதிய பாதை’ படத்தை ரிலீஸ் செய்யும் போது செய்த வித்தியாசமான ஒரு செயலைப் பற்றி பார்க்கலாம். புதிய பாதை ரிலீஸாகும் போது கமல்ஹாசனின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படமும் ரிலீஸாகியுள்ளது. அப்போது அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் இந்த படத்தை தள்ளிவையுங்கள் என்று தயாரிப்பாளரிடம் பலரும் சொல்லியுள்ளனர்.
அப்போது பார்த்திபன் ‘இப்போதுதான் சார் நாம் நம் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும். ரசிகர்கள் ஓவர்ஃப்ளோ ஆகி நம் படத்துக்கு வருவார்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் படத்தை விளம்பரம் செய்யும்போது ”கமல் படம் பாருங்கள். அதற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் எங்கள் ‘புதிய பாதை’ படத்துக்கு வாருங்கள்” என்று வித்தியாசமாக விளம்பரம் செய்து கவனம் ஈர்த்துள்ளார்.
