ஒரே ஒரு ஐடியா தான் பெரிய பிசினஸ் ஆக மாறும். எல்லோருக்கும் இப்படி பிசினஸ் செய்தால் எப்படி இருக்கும் என்ற பலவித எண்ணங்கள் தோன்றலாம். அதை எப்படி முன்னோக்கி நாம் முயற்சி செய்து எடுத்து செல்கிறோம் என்பதை பொறுத்துதான் பிசினஸ் அடிப்படை இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலவிதமான பிசினஸ்களில் கொடி கட்டி பறக்கிறார்கள். அந்த வகையில் சர்வதேச நீச்சல் வீராங்கனை ஆன ஒரு பெண்மணி 100 கோடி வருவாய் தரக்கூடிய நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். அவரை பற்றி இனி காண்போம்.

மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்து வளர்ந்தவர் மேக்னா நாராயண். கல்வியில் சிறந்து விளங்கிய இவர் சிறு வயதில் இருந்து நீச்சலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு தொழில் முறை நீச்சல் வீரராக வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி எடுத்த மேக்னா நாராயண். பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று பல பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார் மேக்னா நாராயண்.
1998 ஆம் ஆண்டு பாங்காக் மற்றும் தாய்லாந்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்காக கலந்து கொண்ட மேக்னா நாராயண் உயர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனது நீச்சல் வாழ்க்கையை விட்டு விட்டார்.
பிறகு ஹாட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் MBA பட்டப்படிப்பை முடித்த மேக்னா நாராயண் தனக்கென ஒரு பிசினசை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படி குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் பொது சுகாதார நிலையை பற்றி ஆராய்ந்து அதன் மூலம் ஒரு தொழிலை தொடங்கலாம் என்று முடிவு செய்தார். தற்போது குழந்தைகளின் ஆரோக்கியமான சிற்றுண்டி உணவுகள் சந்தையில் குறைவாக கிடைப்பது பெற்றோருக்கு கவலையாக இருந்ததை கண்டறிந்த மேக்னா நாராயண் ஜங்க் ஃபுட் மற்றும் துரித உணவுகளை தாண்டி ஊட்டச்சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில் Wholesome Foods என்ற நிறுவனத்தை 2015 ஆம் ஆண்டு தொடங்கினார்.

இந்த Wholesome Foods என்பது The Slurrp Farm- இன் தாய் நிறுவனம் ஆகும். குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு ஆரோக்கியமான உணவு விருப்பங்களை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. குறுகிய காலத்திலேயே பெற்றோர்களின் முதல் தேர்வாக The Slurrp Farm இடம் பிடித்தது. இவரது இந்த நிறுவனத்தில் பாலிவுட் நடிகையும் விராட் கோலி மனைவியும் ஆன அனுஷ்கா சர்மா முக்கிய முதலீட்டாளராக இருக்கிறார். ஊடகங்களின் அறிக்கையின் படி இவரது நிறுவனம் ஆண்டுக்கு 100 கோடி வரை வருவாய் ஈட்டி வருகிறது.
