பிப்ரவரி மாதம் வந்துவிட்டால் நம் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். எங்கு பார்த்தாலும் காதலர் தினத்தை பற்றிய பேச்சுக்கள் தான் இருக்கும். ஆனால் இந்த காதலர் தினத்தில் மிக முக்கியமான ஒரு பொருளாக அனைவராலும் பார்க்கப்படுவது பயன்படுத்தப்படுவது ரோஜா பூக்கள் தான். சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல வித ரோஜாக்களை பயன்படுத்துவார்கள். இந்த காதலர் தினத்தில் ஏன் ரோஜா பூ அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா…? அதைப் பற்றி இனி காண்போம்.

காதலர் தினத்தன்று தங்களது அன்பை வெளிப்படுத்த அனைவரும் ரோஜா பூக்களை பரிமாறி கொள்வார்கள். இந்த ரோஜா பூக்களில் இருந்து வரும் வாசனையானது மனதை அமைதி படுத்தவும் ஆர்வத்தை தூண்டவும் செய்கிறது. அதனால் தான் அன்றைய தினம் ரோஜா பூக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ரோஜாக்கள் அன்பு மட்டும் ஆர்வத்தை அடையாளப்படுத்துகிறது. அதனால் தான் காதலர் தினத்தின் முக்கிய அடையாளமாக இந்த சிவப்பு ரோஜா இருக்கிறது. அடுத்ததாக இளஞ்சிவப்பு ரோஜா எனப்படும் பிங்க் ரோஜா. இந்த நிற ரோஜா நன்றி உணர்வு இனிமையான குணம் போன்றவற்றை காட்டுகிறது.
அடுத்தது வெள்ளை ரோஜாக்களை கொடுக்கும் போது அது அமைதி தூய்மை மற்றும் புதிய தொடக்கத்தை குறிக்கிறது. அடுத்து நட்பு மகிழ்ச்சி மற்றும் பிணைப்பினை குறிக்கும் விதமாக மஞ்சள் ரோஜாக்களை பரிமாறிக் கொள்வார்கள். அன்புக்குரியவர்களின் மனதை கவர இந்த மஞ்சள் ரோஜா உகந்ததாக கூறப்படுகிறது.

அடுத்து ஆரஞ்சு ரோஜா ஆர்வம் உற்சாகம் மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆரஞ்சு ரோஜா இருக்கிறது. உறவுகளின் வெற்றியை கொண்டாட இந்த ஆரஞ்சு ரோஜாவை பயன்படுத்துகிறார்கள். எல்லா நிற ரோஜாக்களையும் கலந்து ரோஜா பூங்கத்தாக கொடுக்கும்போது ஒட்டுமொத்த அன்பையும் அது உருவாக்குவதாக கருதப்படுகிறது. ரோஜாக்களின் பின்னால் இத்தகைய அர்த்தம் இருப்பதால் தான் காதலர் தினத்தில் இருந்து ரோஜா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
