தமிழ் சின்னத்திரைகளில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக ஜீ தமிழ் இருந்து வருகிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளும் சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தொடர்ந்து புதிய புதிய செயல்களை களம் இறக்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான நெஞ்சத்தைக் கிள்ளாதே என புதுப்புது சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வரிசையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மௌனம் பேசியதே. அசோக், ஜோவிதா, சத்யா உட்பட பலரும் இதில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார்கள். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை ஜோவிதா அறிவித்தார்.

அருவி சீரியலில் நடித்துக் கொண்டு இருந்த ஜோவிதா அதற்குப்பின்னர்மௌனம் பேசியதே கமிட்டாகி சில எபிசோடுகள் நடித்துவிட்டு அதிலிருந்து விலகிவிட்டார். அதற்கு சில காரணங்களையும் கூறியிருந்தார். தற்போது அவர் மௌனம் பேசியதே சீரியல் நடித்து வந்த துளசி கதாபாத்திரத்தில் இனி பௌஸி நடிக்கிராராம்.
