அஜித்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அஜித்குமார் உடன் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசான்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர. இப்படத்தின் இசையை அனிருத் செய்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்குமார் நடித்த படம் தற்போது வெளியாகிறது என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்திற்காக காத்திருந்தனர். மகிழ் திருமேனி ஏற்கனவே நேர்காணல்களில் இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு படமாக இருக்கும். பல சஸ்பென்ஸ்கள் இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்போது விடாமுயற்சி படம் எப்படி இருக்கிறது என்று பொதுமக்கள் கூறிய விமர்சனங்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
விடாமுயற்சி படம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஸ்கிரீன் ப்ளே சூப்பராக இருக்கிறது. அனிருத் இசை வேற லெவல். First Half கொஞ்சம் லேகாக இருந்தாலும் இரண்டாவது ஹாஃப் ரொம்ப சூப்பரா பரபரப்பா போகுது. படத்தில் திரில்லர் இருக்குன்னு சொன்னாங்க அந்த அளவுக்கு திரில்லிங் இல்ல உடனே சஸ்பென்ஸ் என்னவென்று நமக்கு தெரிஞ்சுடுது.

ஒரு தனி மனிதன் எப்படி தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் ஏமாற்றும் போது போராடி பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்பதை அருமையாக காட்டியிருகிறார்கள். பைனலா ஒரு டயலாக் அஜித் சார் சொல்றார் அதான் அந்த படத்தோட லீட். இதுவரைக்கும் அஜித்தை இந்த மாதிரி ஒரு படத்துல நடிச்சு நம்ம பார்த்திருக்க மாட்டோம். அவர் மூணு கெட்டப்புல வராரு அதுவே பெரிய விஷயம். மொத்தத்துல ரொம்ப பரபரப்பா கடைசி வரை சீட்டு நுனியில் அமர்ந்து பார்க்கும் படி தான் விடாமுயற்சி படம் இருக்கிறது. ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை போற்றுவார்கள் என்று அனைவரும் ஓரளவு நல்ல விமர்சனங்களை இந்த படத்திற்கு கூறியிருக்கிறார்கள்.
