ஒரே ஒரு படம்தான் எடுத்தாரு.. மொத்த பிஸ்னஸும் க்ளோஸ்.. புலம்பும் விற்பனையாளர்கள்!

By vinoth on மாசி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மூத்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இயக்குனர்கள் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்றோ அல்லது அவுட்டேட் ஆகியோ வெளியேறிவிடும் நிலையில் மணிரத்னம் தன்னுடைய 70 ஆவது வயதிலும் பிஸியான இயக்குனராக வலம் வருகிறார்.

மணிரத்னம் முதலில் இயக்கிய தமிழ் படம் இதயக் கோவில். அதன் பிறகு பகல் நிலவு படத்தை இய்க்கினார். இந்த இரு படங்களும் வெற்றிப்படமாக அமையாததால் அவருக்கு அடுத்த பட வாய்ப்பு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் தனது முதல் ஹிட்டை மௌனராகம் திரைப்படத்தின் மூலமாகதான் கொடுத்தார்.

   

அதன் பின்னர் அவருக்கு என்று பிராண்ட் வேல்யூ உருவானது. நாயகன், தளபதி என அடுத்தடுத்து அவரின் கிராஃப் எகிறிக் கொண்டே சென்றது. ரோஜா மற்றும் பம்பாய் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு அவர் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார். அதனால் இந்தி சினிமாவிலும் அவருக்கு நல்ல பெயர் உருவானது. இந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தனர்.

   

 

இடையில் அவருக்கு பல வருடங்களாக ஹிட் இல்லாமல் இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் மூலமாகக் கம்பேக் கொடுத்தார். அந்த படம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் கல்கி எழ்த்தில் உருவான நாவலின் திரைவடிவம். அந்த படத்தை பல முறை பல திரைக்கலைஞர்கள் எடுக்க ஆர்வப்பட்டனர். ஆனால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

அதனால் அந்த புத்தகத்துக்கு மிகப்பெரிய சந்தை மதிப்பு உருவானது. வருடா வருடம் புத்தகக் காட்சிகளில் அதிகமாக விற்பனை ஆகும் புத்தகமாக இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்த பின்னர் அந்த புத்தகத்தின் விற்பனை அப்படியே படுத்துவிட்டதாம். இதனால் அதிகளவில் அந்த புத்தகத்தைப் பதிப்பித்திருந்த பதிப்பாளர்கள் நஷ்டமேற்படும் எனப் புலம்பத் தொடங்கியுள்ளனர்.