கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் எப்போதுமே விஜய்யும் த்ரிஷாவும் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடிகளாக உள்ளனர். இரண்டு பேரும் சேர்ந்து முதல் முதலில் கில்லி திரைப்படத்தில் தான் நடித்திருந்தனர். அந்தத் திரைப்படம் மெகா ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இருவருக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருந்தது. கில்லி திரைப்படத்திற்கு பிறகு திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி உள்ளிட்ட திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இந்தத் திரைப்படங்களிலும் விஜய் மற்றும் திரிஷாவின் ஜோடி பெரிதாக கொண்டாடப்பட்டது.

ஆனால் அதற்குப் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை இரண்டு பேரும் சேர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக நடிக்கவே இல்லை. இதனைத் தொடர்ந்து பல கிசுகிசுக்களும் வெளிவந்தது. இப்படியான சூழலில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் அவர்களுடைய கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இறுதியில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்திலும் விஜயுடன் இணைந்தே திரிஷா ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு இருந்தார்.
)
பெரும்பாலும் திரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது என்பது அரிதிலும் அரிது. ஆனால் விஜய்க்காக அந்த பாடலில் அவர் நடனமாட ஒப்புக்கொண்டார். தற்போது விஜய் தளபதி 69 படத்தில் பிசியாக நடித்த வர த்ரிஷாவும் அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படியான நிலையில் திரிஷா அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விஜய் தன்னிடம் கூறிய ஒரு விஷயத்தை அவர் பகிர்ந்து உள்ளார். அதில், திருப்பாச்சி ரிலீஸ் ஆனதும் உனக்கு இதில் ஒரு ஸ்கோப்பும் இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள்.

தொடர்ந்து எனக்கு தமிழில் கிடைக்கிற எல்லா கதாபாத்திரமும் அப்படித்தான் இருக்கு. ஆனால் தற்போது ஆதியில் எனக்கு ஸ்கோப் உள்ள ரோல் வந்தது. நான் சும்மா வந்து போகிற மாதிரி தான் இது இருக்கு. நீங்கதான் த்ரிஷா ஸ்கோர் பண்ண போறீங்க என்று ஆதி பட சூட்டிங் அப்போ விஜய் என்கிட்ட சொல்லிகிட்டே இருப்பார். இது போன்ற படங்களை தான் நான் செய்ய ஆசைப்படுகிறேன் அதனால் தான் அடிக்கடி சின்னதா ஒரு கேப் விழுது என்று விஜய் கூறியதை 2026 ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் திரிஷா கூறி இருந்தார்.
