பிரீ புக்கிங் வசூலில் இத்தனை கோடியா..? மீண்டும் கிங் ஆப் ஓபனிங் என நிரூபித்த அஜித்..!

By Soundarya on மாசி 4, 2025

Spread the love

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி. இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் இந்த திரைப்படம் பிரமாண்டமான பொருள் செலவில் உருவாகி உள்ளது.  இந்த படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் சில பல காரணங்களால் தள்ளி போனது. அதேபோல கடந்த பொங்கல் பண்டிகைக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

   

ஆனால் மீண்டும் தள்ளி போனதால் ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள். அதன் பிறகு பிப்ரவரி 6ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் பண்டிகைக்கு படம் வரவில்லை என்றால் என்ன நம் படம் வருவது தான் பண்டிகை என்று அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியிடம் கூறியுள்ளார்.

   

 

அதேபோல பிப்ரவரி 6-ம் தேதி கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு பண்டிகை தான் என்பது ஒரு சந்தேகமே கிடையாது .இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் பிரீ புக்கிங் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் படம் வெளியாக இருக்கும் இந்த நிலையில் உலக அளவில் நடந்து வரும் பிரீ புக்கிங்கில் 18 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் 11 கோடி வெளிநாடுகளில் 4.7 கோடி, கர்நாடகாவில் 1.7 கோடி, கேரளாவில் 30 லட்சம் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் 30 லட்சம் வசூல் செய்துள்ளது. இதனால் அஜித் மீண்டும் கிங் ஆப் ஓப்பனிங் என்று நிரூபித்துள்ளார்.