சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் ஸ்ருதி காணாமல் போய்விடுகிறார். அவரை பரபரப்பாக முத்துவும் மீனாவும் தேடிக் கொண்டிருக்கின்றனர். பார்ட்டி நடக்கும் இடத்தில் ரவி செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கிறார். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் சுருதியை தேடி அவர் டப்பிங் செய்யும் இடத்திற்கு முதலில் செல்கின்றனர். அவர் இங்கு வரவில்லை என்று அங்கிருந்தவர் சொல்கிறார். மறுபக்கம் ரவி வெட்டிங் ஆனிவர்சரி பார்ட்டி பங்க்ஷனுக்கு அனைவரும் வந்துவிடுகின்றனர். எப்படிடா சமாளிப்பது என்று தெரியாமல் விஜயா பார்வதி மற்றும் அவர்கள் நடனப்பள்ளியில் இருக்கும் பசங்களை எல்லோரையும் மேடையில் ஏறி டான்ஸ் ஆடுங்கள் என்று ஆரம்பித்து வைத்து விடுகிறார் ரவி.
சுருதியின் அம்மா அப்பா கடும் கோபத்தில் இருக்கிறார்கள். சுருதியை காணவில்லை ஏதோ பிரச்சனை என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள். மறுபக்கம் டப்பிங் ஸ்டுடியோவில் ஸ்ருதி இல்லாததால் அவருடைய பிரண்டு வீட்டிற்கு முத்து மீனா செல்கின்றனர். அங்கு போய் விசாரிக்கும் போது இங்க வந்துட்டு அவங்க கிளம்பிட்டாங்க ஏதோ வக்கீலை பார்க்க போறாங்கன்னு பேசிக்கிட்டாங்க என்று சொல்லுகின்றனர். மறுபக்கம் முத்துவின் நண்பர் ரவியிடம் சென்று இங்க சமாளிக்க தான் என்ன முத்து அனுப்பி வச்சிருக்கான் அவங்க கூட்டிட்டு வந்துருவாங்க என்று கூறுகிறார். ரவி முத்துவின் நண்பரிடம் எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு எல்லாரும் ஸ்ருதியை கேக்குறாங்க என்று கூறுகிறார்.

அதே போல் விஜயாவும் வந்து ஸ்ருதி எங்கடா போனா எல்லோரும் வந்தாச்சு அவ மட்டும்தான் காணோம் என்று கேட்கிறார். மனோஜ் வந்து என்னடா ஆச்சு கேக் கட் பண்ணிட்டு சாப்பிடலாம் டா ரொம்ப பசிக்குது என்று அவர் ஒரு பக்கம் காமெடி செய்கிறார். அதற்கு அடுத்ததாக ஒரு நடன போட்டி நடந்து கொண்டு இருந்தது. மறுபக்கம் அந்த லாயர் ஆபீசை கண்டுபிடித்து முத்து மீனா செல்கின்றனர். அங்கு ஸ்ருதி இருக்கிறார். என்ன இப்படி பண்றீங்க என்னாச்சு ஸ்ருதி பார்ட்டில உங்களை எல்லாரும் தேடுறாங்க என்று கேட்கிறார் மீனா. உடனே ஸ்ருதி ரவிக்கு நான் இல்லனா சந்தோஷமா தான் இருக்கும் நான் டைவர்ஸ் பண்ணலாம் தான் லாயரை பார்க்க வந்திருக்கேன் என்று கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
