ரொம்ப ப்ரஸரா இருக்கு.. தேசிய விருதை வாங்குனாதான் நான் அதை பண்ண முடியும்.. சாய் பல்லவி ஓபன் டாக்..!

By Nanthini on மாசி 1, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னி நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரியில் படுகா குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சாய் பல்லவி. பள்ளி படிப்பை முடித்த பின்பு மருத்துவத்தில் சேர்ந்து மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்றார் சாய் பல்லவி. மருத்துவர் ஆனாலும் டான்சர் ஆக வேண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறுவயதில் இருந்து ஆர்வம் இருந்தது.

10 வருடங்களாக அந்த நபரை காதலித்து வரும் நடிகை சாய் பல்லவி.. யார் தெரியுமா

   

இதனையடுத்து மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை சாய் பல்லவி. அந்தத் திரைப்படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். படத்தில் அவரை பார்த்த பலரும் இந்த நடிகைக்கு இதுதான் முதல் படமா என்று ஆச்சரியப்படும் வகையில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

   

தஞ்சை பெரிய கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற சாய் பல்லவி!

 

இவர் ஒரு சிறந்த நடிகை என்பது மட்டுமல்லாமல் சிறந்த டான்ஸரும் கூட. விஜய் டிவியில் நடந்த நடனம் தொடர்பான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட அவர் போட்டியாளராக பங்கேற்றார். பிறகு சினிமாவுக்குள் நுழைந்தார். போலிகளை உடைத்த நாயகி. இறுதியாக சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்த இந்து கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

Sai Pallavi on Bollywood PR ecosystem: Why should people keep talking about me? - India Today

இப்படியான நிலையில் அமரன் திரைப்படத்தில் நடித்ததற்காக சாய்பல்லவிக்கு தேசிய விருது அறிவிக்கப்படும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சாய்பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டியில், இது கொஞ்சம் வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் எனக்கு தேசிய விருது வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். எனக்கு 21 வயது இருக்கும் போது என் பாட்டி எனக்கு ஒரு புடவை கொடுத்தார். அதை என் திருமணத்திற்காக பாதுகாப்பாக வைத்திருக்க சொன்னார்.

2 Religions, 2 Castes, Bhanumati Is A Hybrid Girl

அந்த சமயத்தில் என்னுடைய திருமணம் நெருங்கி விட்டதாக நான் நினைத்தேன். 23 அல்லது 24 வயதிற்குள் நான் பிரேமம் செய்தேன், எனக்கு ஒரு பெரிய விருது கிடைக்கும் என்று நினைத்தேன், நான் அந்த சேலையை அணிவேன் என இருந்தேன். என் பாட்டி கொடுத்த சேலையை எப்போது அணிவேன் என்பதற்காக எனக்கு இப்போதும் ஒரு பிரஷர் உள்ளது. அதனால் தேசிய விருது மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி கனவு. நான் விருது வாங்கினாலும் சரி வாங்க விட்டாலும் சரி அந்த சேலையை நான் பத்திரமாக வைத்திருப்பேன். பெரிய பெரிய விருதுகளை விட மக்கள் கொடுக்கும் பாராட்டுக்கள் தான் எனக்கு பெரிது. அதைத் தாண்டி கிடைக்கக்கூடிய விருதுகள் எல்லாம் ஒரு போனஸ் மாதிரி தான். என் கதாபாத்திரங்கள் என்ன உணர்த்துகிறது என்பதை மக்கள் உணர முடிந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய விருது என்று சாய் பல்லவி குறிப்பிட்டுள்ளார்.