ரஜினிகாந்த் படத்தை இயக்க மறுத்தது இதற்காக தான்… காரணத்தை போட்டுடைத்த நடிகர் பிரித்விராஜ்..!

By Soundarya on மாசி 1, 2025

Spread the love

பிரித்விராஜ் மூத்த நடிகர்கள் சுகுமாரன் மற்றும் மல்லிகா ஆகியோரின் மகனாவார். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்தியாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரித்விராஜ். 2002 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான பிரித்வராஜ் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

   

2006 ஆம் ஆண்டு பாக்யராஜ் அவர்களின் மகளான சரண்யா பாக்யராஜ் உடன் இணைந்து பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரித்திவிராஜ். சரண்யா பாக்யராஜ் நடித்த முதலும் கடைசிமான திரைப்படம் பாரிஜாதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு ஜோதிகாவுடன் இணைந்து மொழி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தமிழ் சினிமாவில் பாராட்டுகளை பெற்றார் பிரித்விராஜ்.

   

 

தொடர்ந்து சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, ராவணன் சமீபத்தில் ஆடிஜிவிதம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். தென்னிந்தியாவில் மிகவும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ். தனது நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார் பிரித்திவிராஜ்.

தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் எம்புரான் படத்தை இயக்கியுள்ளார். மோகன்லால் நடித்து இருக்கும் இந்த படம் லூசிபர் படத்தின் 2ம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரித்விராஜ், “லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் என்னிடம் எங்கள் தயாரிப்பில் ரஜினிகாந்த் சாரை வைத்து ஒரு படம் இயக்க முடியுமா? என்று கேட்டார். ஒரு புது இயக்குனருக்கு அது மிகப்பெரிய வாய்ப்பு தான். ஆனால் பகுதிநேர இயக்குனர் ஆன என்னால் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் ரஜினி சாருக்கு கதை தயார் செய்ய முடியாது  என்று சொல்லிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.