சன் டிவியோடு போட்டிபோடும் விஜய் டிவி… TRP-யில் இந்த வாரம் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்கள்..!

By Soundarya on தை 31, 2025

Spread the love

சன் டிவி சீரியலுக்கு போட்டியாக விஜய் டிவி டி ஆர் பி ரேட்டிங்கில் முன்னேறியுள்ளது குறித்து பார்க்கலாம்.

   

சிங்கப்பெண்ணே: கிராமத்து பெண் சென்னைக்கு வந்து குடும்பத்திற்காக எப்படி கஷ்டப்படுகிறார்  என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடரானது இந்த வாரம் 10.8 டிஆர்பி புள்ளிகளை பெற்று முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது.

   

 

மூன்று முடிச்சு: அம்மாவை பழி வாங்குவதற்கு வேலைக்கார பெண் கழுத்தில் கதாநாயகன் தாலி கட்டும் எதிர்பாராத கதைக்களம் தான் இது. இந்த தொடர் 10.2 டிஆர்பி புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

கயல்: குடும்பத்தை நேசிக்கும் ஒரு பெண்ணின் அழகான போராட்டமாக ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 9.64 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

மருமகள்: பிறந்தவீடு மற்றும் புகுந்து வீட்டை காப்பாற்ற போராடும் ஒரு பெண்ணின் பாசப் போராட்டம் தான் இந்த தொடர். இந்த வரம் டிஆர்பி 8.69 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

சிறகடிக்க ஆசை: கலகலப்பான தொடர் சிறகடிக்க ஆசை 8.57 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.

தாயை இழந்த பெண் தாய்மாமனை தாயாக பார்க்கும் இந்த தொடர் 8.52 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தை படித்துள்ளது.

அன்னம்: சன் டிவியில் டப்பிங் தொடராக ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் 8.31 டிஆர்பி புள்ளிகளோடு ஏழாவது இடத்தில் உள்ளது.

எதிர்நீச்சல் 2: சமீபத்தில் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகம் 7.8 டிஆர்பி புள்ளிகளோடு எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பாக்கியலட்சுமி: விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் இந்த வாரம் 7 புள்ளிகளோடு ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர் இரண்டாம் பாகம் இந்த வாரம் 6.93 புள்ளிகள் உடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது