ஒரு ஹீரோயினிக்கு அவ்வளவு, எனக்கு இவ்வளவு தான் சம்பளமா?.. இயக்குனர் கிட்ட சண்ட போட்ட சிவாஜி..!

By Nanthini on தை 31, 2025

Spread the love

நாடக நடிகராக இருந்து 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர்தான் சிவாஜி கணேசன். அதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். எம்ஜிஆர் உடன் இணைந்து கூட்டுக் கிளி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ள சிவாஜி தான் நடிக்கும் படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் கதைகளை தேர்வு செய்து நடித்து வருவது வழக்கம். அதன்படி அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியை கொடுத்துள்ள நிலையில் அவருடைய நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. கமர்சியல் திரைப்படமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பு தனியாக தெரிய வேண்டும் என்று மெனக்கெடும் சிவாஜி, கதை தேர்வுகளையும் எப்போதும் கவனமாக தான் செய்வார்.

கன்னத்தில் அறைந்த நடிகை... 3 நாள் காய்ச்சலில் படுத்த சிவாஜி : என்னதான்  நடந்தது?

   

இப்படிப்பட்ட நிலையில் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி ஆகியோர் நடிப்பில் எதிர்பாராதது என்ற திரைப்படம் 1954 ஆம் ஆண்டு வெளியானது. சி. எச் நாராயணமூர்த்தி இயக்கிய இந்த திரைப்படத்தில் பலரும் நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் சிவாஜி மற்றும் பத்மினி இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ஆகும். படத்தின் கதையை ஸ்ரீதர் எழுதி இருந்த நிலையில் சி.என் பாண்டுரங்கன் இசையமைப்பாளராக பணியாற்றினார். சரவணபவா யூனிட்டி இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்தத் திரைப்படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ள நல்லி குப்புசாமி, 1954 ஆம் ஆண்டு எதிர்பாராதது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டது.

   

கன்னத்தில் ஓங்கி அறைந்த பத்மினி... ரத்தம் சொட்ட காயமான சிவாஜி : படக்குழு  யாரை கவனித்தார்கள்?

 

அப்போது ஹீரோயினியான பத்மினிக்கு 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் ஹீரோவான சிவாஜிக்கு வெறும் ஏழாயிரம் தான் சம்பளம் வழங்கப்பட்டது. இதனை அறிந்த சிவாஜி உடனே ஹீரோவை விட ஹீரோயினிக்கு சம்பளம் எப்படி அதிகமாக கொடுக்கலாம் என்று இயக்குனரிடம் கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் அவங்க 1946 ஆம் ஆண்டு நடிக்க வந்துட்டாங்க உங்கள விட அவங்க சீனியர். நீங்க 1952 இல் தான் நடிக்க வந்தீங்க என்று கூறியுள்ளார். அந்தப் படத்தின் பட்ஜெட்டை வெறும் 55 ஆயிரம் ரூபாய் தான். இதில் ஹீரோவுக்கு ஏழாயிரம் ரூபாயும் ஹீரோயினிக்கு 9 ஆயிரம் ரூபாயும் கொடுத்துள்ளனர். சம்பளம் குறைவாக கொடுத்ததற்கான காரணத்தை கேட்டுவிட்டு சிவாஜி அங்கிருந்து அமைதியாக நகர்ந்து விட்டார் என்று நல்லி குப்புசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.