இன்றைக்கு நடிகர் திலகம் என்று சொன்னாலே உலகமே சிவாஜி கணேசன் என அறிந்து கொள்கிறது. இப்படிதான் ராசிபுரம் பள்ளியில் லட்சுமி நரசிம்மன் என்ற சிறுவன் அரை நிஜார் பருவத்தில் இருக்கும் போது பள்ளி விழாவில் மனோகரா நாடகத்தில் நடித்தான். அன்று சிறுவனின் நடிப்பை பார்த்துவிட்டு ஆசிரியர்களும் மக்களும் சக மாணவர்களும் மனோகரா மனோகரா என்று அழைத்தனர். லட்சுமி நரசிம்மன் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ஆர் எஸ் மனோகர் என்று சொன்னால்தான் அந்த கம்பீர முகம் நம் கண் எதிரே வரும். சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க தொடங்கினார்.

அப்படி நடிக்கும் போது பிற்காலத்தில் நாம் சினிமாவில் சேர போகிறோம், வில்லனாக கலக்க போகிறோம், நாடக உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழப் போகிறோம் என்பதெல்லாம் தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் இவரை நம்மில் பல பேருக்கு தெரியும். 1925 ஆம் ஆண்டு தற்போதைய நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிறந்தவர் அரசு வேலையில் பணியாற்றி கொண்டு சரித்திர நாடகங்கள் முதல் சமூக நாடகங்கள் வரை 100க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/ziGA9VHX61oOs9am3lYi.jpg)
ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் வரவே தான் பார்த்துக் கொண்டிருந்த அரசு வேலையை உதறி தள்ளிவிட்டு 1951 ஆம் ஆண்டு ராஜாம்பாள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சில திரைப்படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் அதன் பின் நாட்களில் குணசித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் மற்றும் ரஜினி என அப்போதைய பல முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து தனது நடிப்பு திறமையால் அசத்தியிருந்த ஆர்எஸ் மனோகர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 100க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்திருக்கிறார். இறுதியாக பாண்டியராஜன் இயக்கத்தில் மனைவி என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படி சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி மக்கள் மனதில் இடம் பிடித்த இவ்வாறு தனது 80 வயதில் 2005 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.
