சிரஞ்சீவி குடும்பத்திற்கு மருமகளாகவும் விக்ரமின் ஜோடி.. வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்..!

By Nanthini on தை 30, 2025

Spread the love

தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நித்தம் ஒரு வானம் மற்றும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தெலுங்கு நடிகை ரிது வர்மா. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் அவர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் குறித்த ஒரு செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது இவர் விரைவில் சிரச்சீவி குடும்பத்திற்கு மருமகளாக செல்ல உள்ளது தான் தற்போது தலைப்புச் செய்தியாக உள்ளது என கூற வேண்டும். நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்த தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜை இவர் காதலித்து வருவதாக சமீப காலமாகவே கூறப்பட்டது.

actress rithu varma beautiful photos | Actress Rithu Varma Pics : கண்ணும்  கண்ணும் கொள்ளையடித்தால்..! ரிது வர்மா லேட்டஸ்ட் கலெக்‌ஷன்ஸ்..!

   

சமீபத்தில் நடிகர் வருண் தேஜ் நடிகை லாவண்யா திரிபாதியை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பு வரும் தேஜ்க்கும் லாவண்யாவுக்கும் அல்லு அர்ஜூன் விருந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி குடும்பத்தினருடன் ரிது வர்மாவும் கலந்து கொண்டிருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனால் அவர் வைஷ்ணவி தேஜை காதலிப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஹைதராபாத்தில் இருவரும் பல இடங்களில் டேட்டிங் இருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களும் தெலுங்கு மீடியாக்களில் வெளியானது.

   

தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா ரிது வர்மா? | Is Ritu Varma in love with  Telugu actor - hindutamil.in

 

அதுமட்டுமல்லாமல் இருவரும் துபாய்க்கு சென்று இருந்த நிலையில் அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.  பொதுவாக ரிது வர்மா இது வரை எந்த ஒரு நடிகருடனும் கிசுகிசுக்கப்பட்டவர் கிடையாது. அவர் முதல்முறையாக டேட்டிங் செய்கிறார் என்றால் அது தீவிர காதலாகவே இருக்கும் என ரசிகர்களும் தெரிவித்து வந்த நிலையில் தற்போது ரிது வர்மா மற்றும் வைஷ்ணவி தேஜ் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது.

రీతూ వర్మతో మెగా హీరో డేటింగ్.. అందుకే వరుణ్ తేజ్ పార్టీలో అలా: క్లారిటీ  ఇచ్చిన వైష్ణవ్ తేజ్ | Vaishnav tej Gives Clarity on Dating Rumors With Ritu  Varma - Telugu Filmibeat

சிரஞ்சீவியின் மற்றொரு உறவினரான நடிகை நிஹாரிகா மூலம் தான் இது வருமாவும் வைஷ்ணவி நண்பர்களாக பழகிய நிலையில் அதை விரைவில் காதலாக மாறியது. தற்போது இவர்களுடைய திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.