நான் விஜய்யோட பினாமியா..? நடந்த விஷயமே வேறு… உண்மையை போட்டுடைத்த மாமா சேவியர் பிரிட்டோ..!

By Soundarya on தை 29, 2025

Spread the love

நடிகர் விஜயின் பினாமி என்று நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில் அதற்கெல்லாம் தற்போது தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் விஜய்க்கும் தனக்கும் எப்படிப்பட்ட உறவு என்பது குறித்தும் ஓபன் ஆக பேசி உள்ளார் இந்த மாதம் பொங்கலுக்கு வெளியான நேசிப்பாயா படம் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை . இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட 90 கோடி ரூபாய் நஷ்டம் குறித்து அவர் பேசியுள்ளார்.

   

அதில், “என்னுடைய மாமியாரும், விஜய்யின் அப்பாவும் சகோதர, சகோதரிகள். ஆரம்பத்தில் விஜய் சினிமாவில் அறிமுகப்படுத்தும்போது எனக்கு அவரை தெரியு.ம் விஜயகாந்தையும், விஜயையும் வைத்து செந்தூரரபாண்டி படம் எடுக்கும்போது நிதி நெருக்கடி ஏற்படும் போதுதான் அவர்கள் என்னை சினிமாவிற்கு அழைத்தார்கள். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் ரசிகன் படத்தையும் என்னையே விஜயின் அப்பா பண்ண சொன்னார் .

   

 

சினிமா குறித்து எனக்கு எதுவுமே தெரியாது .என்னுடைய பிசினஸ் வேறு. என்னுடைய மனைவி மூலம் தொடங்கப்பட்ட கால்பந்தாட்ட போட்டி சொதப்பியதால் சுமார் 90 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தான் விஜய் எனக்கு உதவும் விதமாக தன்னுடைய படத்தை எடுத்து பண்ணும் வாய்ப்பு கொடுத்தார். மற்றபடி எனக்கும் அவருக்கும் தொழில் ரீதியாக எந்த ஒரு நட்புமே கிடையாது.

மாஸ்டர் படத்தை நான் தயாரிக்கவில்லை என்றும், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோவை சேர்ந்த தயாரிப்பாளர் லலித்குமார் தான் அந்த படத்தை தயாரித்தார் என்றும் விஜயின் பினாமி நான் என்றும் ஏகப்பட்ட வதந்திகளை கிளம்பியது. அதெல்லாம் 110 சதவீதம் சுத்தமான பொய் தான். அதுவும் விஜய் சொல்லி தான் லலித்குமார் உள்ளே வந்தார். நான் தான் அந்த படத்தின் தயாரிப்பாளர் என்று கூறியுள்ளார்.