தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சமுத்திரக்கனி. 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றியை ருசித்தவர். திரைத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றிகனியை ருசித்தவர். இயக்குனர் கே பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் வெளியான முதல் படத்திற்கு சிறந்த கதைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து அரசி மற்றும் இதோ பூபாலன் போன்ற சீரியல்களை இயக்கியது மட்டுமல்லாமல் ஜன்னல் மற்றும் மர்ம தேசம் போன்ற சீரியல்களிலும் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான அப்பா மற்றும் சாட்டை போன்ற திரைப்படங்கள் நடிகர் என்பதை தாண்டி இவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றன. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த விசாரணை திரைப்படத்திற்காக சமுத்திரக்கனிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு பாராட்டுக்களும் விருதுகளும் கிடைத்திருந்தாலும் எப்போதும் மிகவும் எளிமையாகவே அனைவரிடத்திலும் பழகும் குணம் கொண்டவர். இவர் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதை ஆசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமானார்.
![]()
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான திரு.மாணிக்கம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படியான நிலையில் சமுத்திரக்கனி சமீபத்தில் அளித்த பேட்டியில், மக்களுக்கு விருப்பமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அப்படிப்பட்ட படங்கள் மூலம் என்னை யார் என்று மக்கள் மத்தியில் நிரூபிக்க முடிகிறது. அவர்களும் என் மீது அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறார்கள். சாட்டை திரைப்படத்தை முடித்த கையோடு மக்களின் அன்பை பார்த்து அடுத்ததாக அப்பா போன்ற கதையை பண்ண வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் வந்தது.

அந்தப் படம் முடிந்த பிறகு அப்போது எழுத ஆரம்பித்த கதையை இப்போதான் ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி முடிச்சேன். சீக்கிரம் அதுக்கான ஷூட்டிங் தொடங்க வேண்டும். நான் என்னதான் பொழப்பு நடத்துவதற்கு தெலுங்கு மற்றும் மலையாளம் என பல படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்தாலும் எனக்குள்ள இருக்க ஒருத்தன உயிரோட வச்சிருக்கிறதுக்காக நான் ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன். அப்படி தான் அது போன்ற கதையை நான் எழுதிக் கொண்டு இருக்கிறேன். இருந்தாலும் நாம ஒரு பெரிய எதிர்பார்ப்போடு இருக்கக்கூடிய படங்களும் தோல்வியை தழுவ தான் செய்யும். அப்பா திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துச்சு. ஆனா அந்தப் படத்தை வாங்கினவங்க தான் நல்ல லாபம் பார்த்தாங்க. எனக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஆச்சு.

அது மாதிரி தான் சாட்டை படத்தை முடித்த கையோடு அடுத்த சாட்டை படம் பண்ணும் போது இரண்டு கோடி ரூபாய் லாஸ். நாடோடிகள் 2 திரைப்படத்திலும் எனக்கு பெரிய நஷ்டம்தான் ஏற்பட்டது. இது போன்ற நஷ்டத்தை சமாளிக்க மற்ற படங்களில் நடித்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து தான் ஒரு படத்தை எடுக்கிறேன். பாக்குறவங்களுக்கு இவன் எல்லா படத்திலும் நடிச்சிட்டு இருக்கா நல்லா சம்பாதிக்கிறான் என்று தான் தெரியும். ஆனா அதுல வர நஷ்டம் யாருக்கும் தெரியாது. தெலுங்கு சினிமாவில் 100 நாளைக்கு மேல ஷூட்டிங் நடக்கும். அதுல எதிர்பார்க்கிற மாதிரி மாசம் மாசம் எல்லாம் பணம் வராது. பாக்குறவங்க கண்ணோட்டம் வேற மாதிரி இருந்தாலும் உண்மையாவே இதுதான் நடக்குது என்று சமுத்திரக்கனி பேசியுள்ளார்.
