திரைத்துறையில் எம்ஜிஆர் மற்றும் சின்னப்ப தேவர் இடையே ஆன நட்பு பலரும் அறிந்த ஒன்றுதான். எம்ஜிஆரை வைத்து படம் தயாரிப்பதற்காகவே தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சின்னப்ப தேவர் 1956 ஆம் ஆண்டு தாய்க்குப்பின் தாரம் என்ற படத்தை எம்ஜிஆர் நடிப்பில் தயாரித்திருந்தார். எம்ஜிஆரின் தம்பி எம்.ஏ திருமுகம் இயற்கையை இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. பெரிய வெற்றி படமாக அமைந்த தாய்க்குப் பின் தாரம் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்த சின்னப்ப தேவர் அதற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

இதில் எம்ஜிஆருக்கு பதிலாக வேறொரு டப்பிங் கலைஞரை டப்பிங் பேச வைத்து படத்தை தெலுங்கில் வெளியிட்டுள்ளனர். இதனை கேள்விப்பட்ட எம்ஜிஆர் நான் இருக்கும்போது என்னை கேட்காமல் என் குரலை டப் செய்து விட்டார் என்று கோபப்பட்டு உள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். அதன் பிறகு 1961 ஆம் ஆண்டு வெளியான தாய் சொல்லை தட்டாதே படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். இந்த திரைப்படத்தை முடித்த பிறகு எம்ஜிஆர் அரசியலில் நுழைந்ததும் அவர் சினிமாவை விட்டு விலகும் வரை சின்னப்ப தேவர் எம் ஜி ஆரை வைத்து மட்டுமே அவரது படங்களை சின்னப்ப தேவர் தயாரித்து வந்தார்.
/indian-express-tamil/media/media_files/NNZ6DndJlxInWFukeaqE.jpg)
அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் 1968 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் தான் காதல் வாகனம். ரசிகர்கள் அறியாத எம்ஜிஆர் திரைப்படங்களில் இதுவும் ஒன்றுதான் என்று சொல்ல வேண்டும். இந்த படத்தின் பூஜை தொடங்கும்போதே வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று கூறினான் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். அந்த நேரத்தில் எம்ஜிஆர் அடிமைப்பெண் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் தான் படபிடிப்புக்காக ஜெய்ப்பூர் செல்வதாகவும் தான் திரும்பி வரும் வரை மற்ற காட்சிகளை படமாக்குங்கள் நான் வந்ததும் என்னுடைய காட்சிகளை படமாக்கிக் கொள்ளுங்கள் என்று கூடி விட்டு ஜெய்ப்பூர் கிளம்பி விட்டார்.

எம்ஜிஆர் சொன்னதைப் போல மற்ற காட்சிகள் படமாக்கி விட ஜெய்ப்பூருக்கு சென்ற எம்ஜிஆர் படப்பிடிப்பு தாமதமானதால் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னதாக வந்துள்ளார். தொடர்ந்து சூட்டிங் இருந்ததால் உடனே தேவருக்கு போன் பண்ண எம்ஜிஆர் படத்தின் வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைத்து கொள்ளலாமா என்று தேவரிடம் கேட்க இதைக் கேட்டு கோபமடைந்த தேவர் நீங்க நடிச்சாலும் நடிக்கல நாளும் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறிவிட்டு ஃபோனை வைத்து விட்டார். இதைக் கேட்டதும் எம்ஜிஆர் சோர்வாக இருந்தாலும் பரவாயில்லை என்று இரவும் பகலாக நடித்த மூன்றே நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார். இவ்வளவு பெரிய சிக்கல்களை சந்தித்து வெளியான காதல் வாகனம் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது.
