ஒரு நாளைக்கு நான் 60 சிகரெட் அடிப்பேன்… மொத்த சீக்ரெட்டையும் கூறிய நடிகர் வினய்…

By admin on தை 27, 2025

Spread the love

வினய் ராய் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் ஆவார். 2007 ஆம் ஆண்டு ‘உன்னாலே உன்னாலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் வினய் ராய்.

   

முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது மிகப் பிரபலமாக ஆனார் வினய் ராய். அதை தொடர்ந்து ஜெயம் கொண்டான், என்றென்றும் புன்னகை, அரண்மனை, துப்பறிவாளன், எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் வினய் ராய்.

   

2010 காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்தார் வினய் ராய். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு இரண்டாம் கட்ட கதாநாயகன் போன்ற கதை அம்சம் தான் அவருக்கு அமைந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் வினய் ராய்.

 

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட வினய் ராய் தனது தனிப்பட்ட பழக்கங்களை பற்றிய சீக்ரட்களை கூறி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நான் ஒரு செயின் ஸ்மோக்கராக இருந்திருக்கிறேன். ஒரு நாளைக்கு 60 சிகரெட் வரை அடிப்பேன். அந்த பழக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன். தற்போது அந்த பழக்கத்திலிருந்து வெளி வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று பகிர்ந்து இருக்கிறார் வினய் ராய்.