கடலுக்கு அடியில் திருமணம் செய்து கூட ஜோடி… காரணம் என்னனு தெரிஞ்சா ஆச்சர்யபடுவீங்க….

By admin on தை 25, 2025

Spread the love

ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. திருமணத்தை மறக்க முடியாத ஒரு நினைவாக மாற்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். ஆனால் புதுச்சேரியை சேர்ந்த ஒரு ஜோடி கடலுக்கு அடியில் திருமணம் செய்து இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் கூறிய காரணத்தை கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். அது என்னவென்று இனி காண்போம்.

   

புதுச்சேரியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் ஸ்கூபா டைவிங் பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது தங்கை தீபிகா, ஸ்கூபா டைவிங் வீராங்கனை ஆவார். இவரும் புதுச்சேரியை சேர்ந்த IT ஊழியரான ஜான் பிரிட்டோ என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் தங்களது திருமணத்தை ஆழ் கடலில் நடத்தி இருக்கின்றனர்.

   

கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி ஆழ்கடலில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். கடல் மாசுபடுத்துதல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி இவர்கள் இந்த மாதிரி திருமணம் செய்து கொண்டதாக கூறுகின்றனர். கடலை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும் எனும் நோக்கிலேயே இந்த மாதிரி திட்டமிட்டு செய்ததாகவும் கூறி இருக்கின்றனர்.

 

இவர்களது திருமணம் கடலுக்கு அடியில் 40 நிமிடங்கள் நடைபெற்றது. ஒரு கேமராமேன் 3 உறவினர்கள் என ஐந்து பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இது போல் திருமணம் செய்து கொண்டது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று தீபிகா ஜான் பிரிட்டோ தம்பதி கூறியிருக்கிறார்கள்.