தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் டி.இமான். இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி மற்றும் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே இசையமைப்பாளர் இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் தனது மனைவியை இமான் விவாகரத்து செய்து விட்டார். அதுவும் விவாகரத்து செய்து ஓராண்டுக்கு பிறகு தான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

பிரபல கலை இயக்குனர் உபாால்டுவின் மகள் எமிலி என்பவரை இமான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவரை மறுமணம் செய்து முடித்துள்ளார். இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பிறகு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று இமான் தன்னுடைய 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, “ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவருடைய ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 9 முதல் 10 கோடிகள் வரை இருக்குமாம். 2021ம் ஆண்டின் கணக்குப்படி இவருடைய சொத்து மதிப்பு ரூ. 55 கோடி முதல் ரூ. 60 கோடி வரை இருக்கு மாம்.
