தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு வருகின்ற பிப்ரவரி ஆறாம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படியான நிலையில் விடாமுயற்சி திரைப்படம் குறித்தும் படத்தில் பணியாற்றியது குறித்தும் அஜித் பற்றி இயக்குனர் மகில் திருமேனி பிரபல சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், படத்தில் கமிட்டான போது அஜித் சார் ஒன்று சொன்னாரு. பலரும் பலவிதமா பேசுவாங்க, அதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் என்று கூறினார். படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சில பிரச்சனைகள் இருக்கின்றது என தெரிந்த பிறகு எனக்கு லைக்காவில் இருந்து போன் செய்து கூறினார்கள். பிறகு அஜித் சார் ஃபோன் பண்ணி, நம்ம படம் பண்டிகைக்கு வரவில்லை என்றால் என்ன? நம்ம படம் வருகின்ற நாளை பண்டிகையாக கொண்டாடுவோம், கவலைப்படாம வேலைய பாருங்க என்று கூறினார்.

மேலும் என்னை நம்பி பணம் போட்டு உள்ளார்கள், எனக்கு ரேசில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் ரேசுக்கு செல்வதற்கு முன்பு அந்த இரண்டு படங்களின் வேலைகளையும் முழுவதுமாக முடித்துக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் என்னால் ரேசில் நூறு சதவீதம் ஆக்சிலேட்டரை அழுத்த முடியாது. இரண்டு படங்கள் உள்ளது, அதன்படிகளை முடிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் என்னால் ரேசுக்கு உண்மையாக இருக்க முடியாது என்று என்கிட்ட சொன்னாரு. அவருடைய அந்த வார்த்தைகளை நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என்று மகிழ் திருமேனி அஜித் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
