ரூ 5000 முதலீடு செய்தால் ரூ 8 லட்சம் வருமானம் கிடைக்கும்… Post Office- இன் இந்த சூப்பர் திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க…

By admin on தை 24, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய இரண்டும் மிக முக்கியமானவை. வங்கிகளைப் போலவே தபால் அலுவலங்களிலும் பல சேமிப்பு திட்டங்கள் மக்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த தபால் நிலையங்களில் நீங்கள் உங்கள் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்யும்போது உங்கள் படத்திற்கு உத்தரவாதமும் நல்ல ஒரு வருமானமும் கிடைக்கும். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் ரூபாய் 5000 டெபாசிட் செய்தால் உங்களால் 8 லட்சம் ரூபாய் வருமானம் பெற முடியும். அது என்ன திட்டம் என்பதை பற்றி இனி காண்போம்.

   

போஸ்ட் ஆபீஸ் இல் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ரூபாய் 5000 சேமிப்பது மூலம் 8 லட்சம் நிதியை திரட்ட முடியும். இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு 6.7% வட்டி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூபாய் 5000 தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

   

இந்த திட்டத்தின் கால அளவு ஐந்தாண்டு ஆகும். மாதம் ரூ 5000 என ஐந்து ஆண்டுகளின் முடிவில் நீங்கள் மொத்தம் ரூபாய் 3,00,000 டெபாசிட் செய்து இருப்பீர்கள். அதில் ரூபாய் 56, 730 வட்டியாக கிடைக்கும். அதாவது உங்களது சேமிப்புத் தொகை ரூபாய் 3,56,830 ஆக இருக்கும்.

 

இத்துடன் நீங்கள் உங்கள் முதலீட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த டெபாசிட் திட்டத்தை மேலும் நீங்கள் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அப்போது பத்து ஆண்டுகளில் உங்களது டெபாசிட் செய்யும் தொகை ரூபாய் 6,00,000 ஆக இருக்கும். இதற்கான வட்டி ரூ 2,54,272 ஆக இருக்கும். இதன்படி 10 ஆண்டுகளில் உங்களது மொத்த டெபாசிட் நிதி ரூ 8,54,272 ஆக இருக்கும். இதன் மூலம் 5 வருடங்களுக்கு நீங்கள் ரூ 5000 டெபாசிட் செய்யும்போது 10 வருடங்கள் கழித்து உங்களுக்கு 8 லட்சத்திற்கும் மேலாக வருமானம் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் நீங்கள் சேர விரும்பினால் அருகில் உள்ள தபால் நிலையத்தில் இந்த தொடர் வைப்பு திட்டத்தை தொடங்கலாம். இதில் நீங்கள் ரூபாய் 100 இல் இருந்தே முதலீடு செய்து கொள்ளலாம். ஒரு வருடம் முதலீட்டுக்கு பிறகு 50 சதவீதம் வரை கடன் பெற்று கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது.