குட் நைட், லவ்வர் என கடந்த இரண்டு வருடங்களாக அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த மணிகண்டன் அடுத்ததாக ஹீரோவாக நடித்த படம் குடும்பஸ்தன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் அவர் நடித்த லவ்வர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்போது ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜேஸ்வரி காளி சாமி இயக்கி உள்ளார். இந்த படம் ஜனவரி 24ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் ரிலீஸ்ஆகியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்து riview கொடுத்துள்ளார் புளூ சட்டை மாறன். அதில், “படத்தின் ஆரம்பத்தில் ஹீரோ அவசர அவசரமாக கதாநாயகியை சாதி மறுப்புத் திருமணம் செய்கின்றார். இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தாலும், கடைசிய ஹீரோ குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றார். பெற்றோர்களுக்கும் சரியான வருமானம் இல்லை என்பதால் ஹீரோவின் வருமானத்தை நம்பிதான், மொத்த குடும்பமும் உள்ளது. இப்படி தான் படத்தின் கதை நகர்கிறது.

நடிகர் கல்யாணத்தை பண்ணுறாரு. குடும்ப வாழ்க்கைக்குள்ள போறாரு. அவருக்கு நெறைய கடன் கஷ்டம் வருது அப்படின்ற மூடுல தான் நம்மள படம் பார்க்க வைக்குறாங்க. ஆனா அதை விட்டுட்டு ஒரு எப்படி வேணுனா வாழலாம் அப்படின்ற கூட்டத்துல இப்படி தான் வாழணும்னு நினைக்குறவன் வாழ்ந்தான்னா எவ்ளோ கஷ்டப்படுவான் என்று செட் பண்ணி படத்தை பண்ணியிருந்தா ரொம்ப சீக்கிரமா நாம ரசிச்சிருக்கலாம்.

ஆரம்பத்துல படம் எதை நோக்கி போகுதுன்னு புரிய லேட் ஆச்சு. எப்படி வேணுனா வாழலாம்ம் மத்தியில் இப்படி தான் வாழ்வேன் அப்படிங்குறவன் எப்படிலாம் கஷ்டப்படுவான் இறுதியில் என்னாச்சு அபப்டின்ற கதையை ஸ்ட்ராங்க் ஆ பண்ணியிருந்தா இன்னுமே சுவாரஸ்யமா இருந்திருக்கும். படம் கொஞ்சம் நீளம். இருந்தாலும் இந்த படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு படம் தான்” என்று கூறியுள்ளார்.
