தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை மீதா ரகுநாத். இவர் முதன்முதலாக முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தர்புகா சிவா இயக்கிய முதல் நீ முடிவும் நீ முன்னணி நடிகையாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பள்ளி காலத்தை வைத்து எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ZEE 5 இன் பைவ் சிக்ஸ் செவன் 8 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

இது முழுவதும் நடனம் தொடர்பான கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இவர் தற்போது மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள குட் நைட் என்ற தமிழ் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் மீதா ரகுநாத்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

மீதாவின் கெரியர் பிக்கப் ஆன கையோடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மீதாவின் சொந்த ஊரான ஊட்டியில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து மீதா ரகுநாத்தின் திருமணம் சத்தமில்லாமல் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வரும் மீதா ரகுநாத் இணையத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது கருப்பு நிற சேலையில் கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

