தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள அருண் விஜய் தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் பல போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த இடத்தை அடைந்துள்ளார். 90களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய்க்கு அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க சுமார் 20 வருடங்கள் ஆனது. இந்த 20 வருடங்களும் தன் விடாமுயற்சியை கைவிடாமல் அவர் தொடர்ந்து போராடி வந்தார். அந்தப் போராட்டத்திற்காக பயனை தான் தற்போது அருண் விஜய் அனுபவித்து வருகின்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு கௌதமேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/05/New-Project-2020-05-16T204848.732.jpg)
இந்த திரைப்படம் தான் அவருக்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து குற்றம் 23, தடம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது தனுசுடன் இணைந்து இட்லி கடை மற்றும் ரெட்டை தல போன்ற பல படங்களில் நடித்து வரும் அருண் விஜயின் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் வெளியானது. இந்தத் திரைப்படம் அருண் விஜய் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு சுமார் பத்து வருடங்கள் கழித்து அருண் விஜய் மீண்டும் தன்னை ஒரு நடிகராக நிரூபித்து காட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அருண் விஜய்க்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இப்படியான நிலையில் அருண் விஜய் சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் இருக்கு இருந்தாலும் இந்தத் திரைப்படம் நான் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நீங்க நினைக்கும் திரைப்படம் எது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அருண் விஜய், கமல் சாரோட சத்யா படத்தை பண்ணி இருக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. அதில் வரும் வளையோசை கலகலவென பாட்டு அமலா மேம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். சண்டை காட்சிகள், பாடல்கள், ரொமான்ஸ் முக்கியமா முரட்டு இளைஞரோட கதை என்று தான் இந்த படத்தை சொல்ல வேண்டும். இந்தப் படத்தை நான் பண்ணி இருந்தா நல்லா இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என அருண் விஜய் பேசியுள்ளார்.
