கைமாறிய லோகேஷ் கனகராஜின் இரும்புக்கை மாயாவி.. சூர்யாவுக்கு பதில் நடிக்கப்போவது இந்த பான் இந்தியா நடிகரா..?

By Nanthini on தை 18, 2025

Spread the love

மாநகரம் திரைப்படம் மூலமாக கோழி உடலில் இயக்குனராக நுழைந்தவர் தான் லோகேஷ் கனகராஜ். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக கைதி என்ற மாஸ்டர் பீஸ் திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து விஜயை வைத்து மாஸ்டர், கமல் நடித்த விக்ரம், தளபதியின் லியோ என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நம்பர் ஒன் இயக்குனராக மாறினார். தற்போது இவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் வரிசை கட்டி நிற்கின்றனர். அந்த அளவுக்கு இவருக்கு மவுசு அதிகரித்து விட்டது. இவருடைய இயக்கத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படம் உருவாகி வருகின்றது.

Irumbu Kai Maayavi: Lokesh Kanagaraj opens up on his dream project with  Suriya; 'Whenever I begin the project, it will...'

   

 

   

இந்த திரைப்படத்தில் ரஜினி மட்டுமல்லாமல் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் மற்றும் நாகார்ஜுனா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. கூலி திரைப்படத்தை முடித்த கையோடு கார்த்தி நடிக்கும் கைது 3 திரைப்படத்தை இயக்க உள்ளார். இதை தவிர லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து ரோலக்ஸ் , இரும்பு கை மாயாவி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்குவதாக இருந்தது. ஆனால் இதில் இரும்பு கை மாயாவி திரைப்படம் தற்போது கைமாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Aamir Khan is the reason people in north India know me', says Suriya -  Hindustan Times

அதாவது இரும்பு கை மாயாவி திரைப்படத்தில் தற்போது சூர்யாவுக்கு பதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவுக்கு பதில் அமீர் கான் நடிக்க உள்ளதால் இரும்புக்கை மாயாவி திரைப்படம் பான் இந்தியா அளவில் உருவாக உள்ளதாம். ஏற்கனவே கஜினி ரீமேக் திரைப்படத்தில் அமீர்கான் நடித்த நிலையில் தற்போது சூர்யா மும்பையில் செட்டிலாகி விட்டதால் அவருடன் உள்ள நட்பு நீடிப்பதற்காக தன் படத்தை அவருக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.