சினிமாவுல என்னுடைய போட்டியாளர் ரஜினி கிடையாது, இவங்க தான்.. உண்மையை உடைத்த கமல்ஹாசன்..!

By Nanthini on தை 16, 2025

Spread the love

கமல்ஹாசன் என்ற பெயரை இந்திய சினிமாவின் வரலாற்றில் இருந்து அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது. சிறுவயதிலிருந்தே கேமரா முன்பு நிற்கும் அவர் சினிமாவில் அனைத்து ஜானரிலும் புகுந்து விளையாட கூடியவர். சினிமா மட்டுமல்லாமல் உலக விஷயங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். அறிவு வளர்வதற்கு கல்வி என்பது முக்கியம்தான். இருந்தாலும் பள்ளிக்கல்வி முடிக்காத ஒருவர் இவ்வளவு அறிவோடு இருக்கிறாரே என்று பலரும் கமல்ஹாசனை பார்த்து ஆச்சரியப்படுவார்கள். சுமார் 233 படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியையும் தொடங்கியுள்ளார். ஆனால் சினிமாவில் ஜொலித்தது போல அவரால் அரசியல் களத்தில் ஜொலிக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

Actor Kamal Haasan With A New Look See Latest Photos Here | கமல்ஹாசனா இது  பாதி வயது குறைந்த தோற்றத்தில் கமல்ஹாசன் வைரல் போட்டோஸ் News in Tamil

   

அனைத்தையும் புரிந்து கொண்ட அவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் நினைத்ததை போல் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிக்கு எப்பவுமே சினிமாவில் போட்டி என்று காலம் கடந்தும் பேசப்பட்டு வருகிறது.

   

ரஜினி, கமல்... இன்றும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸை ஆளும் நாயகர்கள்! |  actor rajini and kamal the duo rule tamil cinema kollywood here how -  hindutamil.in

 

இது தொடர்பாக கமல்ஹாசன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது உங்களுக்கு சினிமாவில் ரஜினி தான் போட்டியா என்று கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், எனக்கு சினிமாவில் ரஜினி மட்டும் போட்டி கிடையாது. சினிமாவில் புதிதாக நடிக்க வரும் திறமை வாய்ந்த நடிகர்களும் எனக்கு போட்டிதான். அவர்களை தான் எனக்கு போட்டியாளராக நான் நினைக்கிறேன். நல்ல திறமை வாய்ந்த நடிகர்கள் சினிமாவுக்குள் புதிதாக நுழையும் போது அவர்களுக்கு இணையாக நானும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். இன்னைக்கு நீங்க செய்தியாளரா இருக்கீங்க ஒருவேளை நாளைக்கு நீங்களும் சினிமாவுக்கு வந்து நல்லா நடிச்சா நீங்களும் எனக்கு போட்டியாளர் தான் என்று நான் கூறுவேன் என கமல்ஹாசன் பேசியுள்ளார்.