ரோகிணி செய்த செயலை கண்டுபிடித்த முத்து… தரமா செஞ்சு விட்ட ஸ்ருதி… சிறகடிக்க ஆசையில் இன்று…

By admin on தை 16, 2025

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் திங்கட்கிழமை எபிசோடில் மலேசியாவில் இருந்து வயதான தம்பதி கேட்கும் கேள்விகளிடமிருந்து தப்பிக்க ரோகிணி பல் வலிப்பது போல் நடித்துக் கொண்டிருந்தார். அவரை நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்கிறேன் என்று ஸ்ருதி கூட்டி செல்கிறார். முத்து சந்தேக கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தார். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

   

இன்றைய எபிசோடில் கிச்சனில் முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து இந்த பார்லர் அம்மாவை பாத்தியா மீனா அவங்க அப்பாவ பத்தி எங்க கேட்டுருவாங்கன்னு சொல்லிட்டு உடனே பல் வலிக்கிதுன்னு சொல்லிட்டு போயிடுச்சு. எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு மீனா. பல்லு வலி எப்பவுமே உடனே வராது ஃபர்ஸ்ட் பல் நமநமங்கும் அப்புறம் லேசா வலிக்கும் அதுக்கு அப்புறம் தான் அதிகமா வலிக்கும் திடீர்னு யாருக்குமே பல்லு வலி இப்படி பேச முடியாத அளவுக்கு வராது என்று கூறுகிறார்.

   

உடனே மீனாவும் ஆமாங்க கொஞ்சம் முன்னாடி கூட ரோகினி கிச்சன்ல வந்து என்கிட்ட பேசிட்டு தேங்காய் துண்ட எடுத்து அனில் கடிக்கிற மாதிரி வேகமா கடிச்சு சாப்பிட்டுட்டு இருந்தாங்களே பல் வலிச்சா அப்படி சாப்பிட முடியாது என்று கூறுகிறார். பாத்தியா மீனா இந்த பார்லர் அம்மா பின்னாடி ஏதோ ஒரு மர்மம் இருக்கு அதை கூடிய சீக்கிரம் என்னன்னு நான் கண்டுபிடிக்கிறேன். மலேசியாவை பத்தி பேச்சு எடுத்தாலே அது ஒவ்வொரு நேரமும் இப்படி எஸ்கேப் ஆயிட்டே இருக்கு என்று கூறுகிறார் முத்து.

 

அடுத்ததாக மலேசியாவில் இருந்து வந்த வயதான தம்பதியினர் சாப்பாடு நல்லா இருந்துச்சு என்று அனைவரையும் வாழ்த்தி விட்டு சென்று விடுகின்றனர். ரோஹிணியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு சென்ற ஸ்ருதி டாக்டரை பார்க்க வைக்கிறார். ரோகினி எவ்வளவோ சொல்லியும் விடவில்லை டாக்டர் பார்த்துவிட்டு ஒரு சொத்தை பல் இருக்கிறது என்று கூறுகிறார் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். உடனே சுருதியும் உடனே புடுங்கி இருங்க டாக்டர் நான் இவங்கள புடிச்சுக்கிறேன் என்று சொல்லி ரோகினியின் பல்லை பிடுங்க வைத்துவிட்டார்.

ரோகிணி அய்யோ இவ கிட்ட போய் மாட்டிக்கிட்டோமே பொய் சொல்லி இப்படி ஆகிருச்சு என்று வேதனையுடன் வருகிறார். வீட்டிற்கு சுருதி ரோகிணியை கூட்டிட்டு வருகிறார். வீட்டில் அனைவருக்கும் ஐஸ்க்ரீம் கொடுக்கிறார். அனைவரும் சாப்பிடுகின்றனர். மனோஜ் என்ன ரோகினி என்கிட்ட சொல்லாம போயிட்டு வந்து கேட்கும் போது பல்லு வலி சொல்லிக்கிட்டா வரும் திடீர்னு வந்துச்சு ஹாஸ்பிடல் போனேன் டாக்டர் கூட எனக்கு இப்ப புடுங்க வேண்டாம் தான் டாக்டர் சொன்னாங்க இந்த ஸ்ருதி தான் புடுங்க வச்சுட்டாங்க என்று கூறுகிறார்.

அடுத்ததாக முத்து தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அதில் ஒரு நண்பர் நான் வெளிநாட்டுக்கு போற எல்லாருக்கும் சரக்கு வாங்கிட்டு இருக்கேன். வாங்க பார்ட்டி பண்ணலாம் என்று கூப்பிடுகிறார். உடனே என் பொண்டாட்டி திட்டுவாளே என்று சொல்லிட்டு முத்து மீனாவுக்கு போன் செய்கிறார் மீனா குடிக்க கூடாது என்று சொல்கிறார் அதோட இன்றைய எபிசோடு முடிந்தது.