தமிழ் சினிமாவில் பெண் காமெடி கேரக்டர் என்றால் மனோரமாவுக்கு அடுத்து நினைவுக்கு வருவது கோவை சரளாதான். 1979 ஆம் ஆண்டு வெளியான வெள்ளி ரதம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் பாக்கியராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் பெரிய வெற்றி படமாக அமைந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு வைதேகி காத்திருந்தாள், தம்பிக்கு எந்த ஊரு, சின்ன வீடு மற்றும் காதல் பரிசு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய காமெடி மூலம் தனி முத்திரையை பதித்தார். சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த திரைப்படத்தில் கமல் மற்றும் கோவை சரளா இடையேயான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய இளம் வயதிலேயே சின்ன வீடு படத்தில் நடிகர் பாக்கியராஜ் அம்மாவாக நடித்திருப்பார்.

அதனைப் போலவே கவுண்டமணி, செந்தில், வடிவேலு மற்றும் சூரி உள்ளிட்ட காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து கலக்கியுள்ளார். கரகாட்டக்காரன் படத்தில் நடித்தது இன்றளவும் கோவை சரளாவின் நடிப்பை ரசிக்கும் படங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. இறுதியாக செம்பி என்ற திரைப்படத்தில் கதையை நாயகியாக நடித்த கலக்கி இருந்தார். இப்படியான நிலையில் கோவை சரளா சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் தன்னை நாயகியாக ஆக்குகிறேன் என்று கூறி ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சிறுவயதில் என் அப்பாவின் மூலம் வெள்ளி ரதம் படம் எனக்கு கிடைத்தது. பாக்கியராஜ் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்.

அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். அப்போது நான் சினிமாவில் ஹீரோவாகிவிட்டால் நீதான் நாயகி என்று சொல்லி இருந்தார். அப்போது சுவரில்லாத சித்திரங்கள் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் அவர் என்னை கண்டு கொள்ளவில்லை. பெரிய ஆளாக மாறிவிட்டதால் நம்மை மறந்து விட்டார் என்று நான் நினைத்தேன். அப்போது ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு ஹோட்டலில் அவர் தங்கி இருந்த நிலையில் அவரைப் பார்க்க நான் அங்கு போனதும் அதிர்ச்சியான அவர் நீ எதுக்கு இங்க வந்த என்று கேட்டதும் உங்களை பார்க்க தான் வந்தேன் என்று சொன்னேன். நீ வீட்டுக்கு போ என்று சொல்லிவிட்டு அதன் பிறகு வீட்டுக்கு வந்தார். என்னை நாயகி ஆக்குகிறேன் என்று சொன்னிங்களே என்று அப்போ அவர் கிட்ட நான் கேட்டேன். அதன்பிறகு தான் அவர் எனக்கு முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார் என்று கோவை சரளா கூறியுள்ளார்.
