ஜனவரி 12ஆம் தேதி சுந்தர்சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் மதகஜராஜா. இந்த படத்தை பார்த்ததும் ரசிகர்கள் ஜனவரி 14-ஆம் தேதி வெளியான படங்களை பார்ப்பதற்கு முன்பு பொங்கல் வின்னர் மதகஜராஜா தான் என்று அடித்து சொல்லிவிட்டார்கள்.

இந்த நிலையில் ஜெயம் ரவி, நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான காதலிக்க நேரமில்லை மற்றும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் நடிப்பில் வெளியான நேசிப்பாயா உள்ளிட்ட படங்களில் முதல் நாள் வசூல் விபரம் வெளியான நிலையில் மதகஜராஜாவின் வசூல் தான் அதிகமாக உள்ளது.

காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தால் கூட தியேட்டர் பக்கம் ரசிகர்கள் ஒதுங்கவே தயங்கிய நிலையில் முதல் நாள் வசூல் வெறும் 2.35 கோடி தான் வந்திருப்பதாக கூறப்படுகிறது . ஆனால் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் வந்ததும் காரணமாக இந்த வாரம் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தாத நிலையில் குறைவான தியேட்டரில் மட்டுமே வெளியாகி அங்கேயும் கூட்டம் வராமல் வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகியுது.

ஆனால் மதகஜராஜா ஞாயிற்றுக்கிழமை வெளியான இந்த படம் முதல் நாள் இரண்டு நாட்களில் 6.50 கோடி வசூலை கடந்த நிலையில் பொங்கல் விடுமுறையான நேற்று மட்டுமே ஆறு கோடி ரூபாய் வசூல் செய்து இதுவரை 12 கோடி வசூலோடு பொங்கல் ரேஸில் முன்னிலையில் உள்ளது. மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வசூல் வேட்டை நடத்தினால் இந்த படம் 50 கோடி வசூலை கடக்கும் என்று கூறப்படுகிறது
