இந்தப் பொங்கல் மதகஜராஜாவுக்கு தான் போல.. தொடர்ந்து இரண்டாவது நாளிலும் அதிகரித்த வசூல்..!

By Nanthini on தை 14, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் உள்ளிட்டோ நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மதகஜராஜா. சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 வருடங்கள் கழித்து படம் நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஷால் மற்றும் சந்தானத்துடன் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

மதகஜராஜா Review: சுந்தர்.சி + விஷால் கூட்டணியின் காமெடி சரவெடி! | Madha  Gaja Raja Movie Review - hindutamil.in

   

12 வருடங்களுக்குப் பிறகு படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் படம் பேரதரவை பெற்று வருகிறது. விஷாலின் மதகஜராஜா படம் முதல் நாளில் சிறப்பான ஓப்பனிங் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த பொங்கல் வின்னரே மதகஜராஜா திரைப்படம் தான் எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன. சமீபத்தில் நடிகர் விஷாலின் உடல்நலம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து அவரை தீவிர நோயாளியாக சித்தரித்த நிலையில் தனக்கு இருந்தது வெறும் வைரல் காய்ச்சல் மட்டும் தான் என்றும் தற்போது நான் நலமுடன் இருக்கிறேன் என்றும் மீண்டு வந்து விஷால் பதிலடி கொடுத்திருந்தார்.

   

மதகஜராஜா படம் எப்படி இருக்கு.. வெளிவந்த ரசிகர்களின் விமர்சனம் இதோ

 

இரண்டு மணி நேரம் படம் போறதே தெரியவில்லை லாஜிக் இல்லை என்றாலும் காசு கொடுத்து படத்துக்கு போகும் ரசிகர்களை சிரிக்க வைத்து அனுப்புவதே சிறப்பான விஷயம் என படத்தை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். படத்தில் இடம்பெற்ற விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்க முதல் நாள் 3.2 கோடி வசூல் செய்த மத கஜ ராஜா 2வது நாளில் 3.5 கோடி ரூபாய் வசூல் வரை கூடியிருக்கிறது. 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 6.7 கோடி ரூபாய் வசூலை இந்த படம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.